பிரதமர் நவாஸ் ஊழலா? ஆதாரமில்லை! நீதிமன்றம் தீர்ப்பு

World
Typography

 இஸ்லாமாபாத், ஏப்ரல்.21- பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரிப்பை பதவியிலிருந்து நீக்குவதற்கு தொடுக்கப்பட்ட ஊழல் விசாரணையில் போதுமான ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தானின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

வெளிநாடுகளில், வங்கிக் கணக்குகளில் சொத்துக்களைப் பதுக்குவதில் பிரதமர் நவாசின் மூன்று பிள்ளைகள் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் 2015-ஆம் ஆண்டில் வெளியானது. தவறான வழியில் தாமும் தமது குடும்பமும்  சொத்துச் சேர்க்கவில்லை என்று நவாஸ் மறுத்தார்.

இந்தப் பிரச்சனையினால் நவாஸ் கடும் சிக்கலை எதிர்நோக்கி இருந்தார். பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் விலகவேண்டும் என்று அரசியல் கட்சிகள் பலத்த நெருக்குதலை அளித்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சியினர் அளித்த நெருக்குதலுக்கு இணங்கி இது குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் ஒப்புக்கொண்டது.

இந்த விசாரணையின் முடிவில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களில் போதுமான ஆதாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்புக் கூறியது. உச்சநீதிமன்ற வளாகத்தில் ஆயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் திரண்டு, நவாஸ் பதவி விலகவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS