மசூதி மீது தாக்குதல் எதிரொலி: 24 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை 

World
Typography

பாகிஸ்தான்,  பிப்ரவரி 17 -  பாகிஸ்தானில் உள்ள ஒரு மசூதியில் வியாழக்கிழமை இரவு நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டு தாக்குதலில்  76 பேர் பலியாகினர்.  150 பேர் படுகாயமடைந்தனர். பலரது நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில்,  அந்நாட்டுப் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின்  உத்தரவையடுத்து, இந்த தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகளை வேட்டையாட நாடு முழுவதும் பாதுகாப்புப் படையினர் தேடுதலில்  ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் பலனாக, கடந்த 24 மணி நேரத்தில் 24 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS