லஞ்ச ஊழல்: சாம்சோங் நிறுவனத் தலைவர் கைது! 

World
Typography

 சியோல், பிப்.17- தென் கொரியாவின் பெண் அதிபர் பார்க் ஜெயுன் ஹை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு காரணமான ஊழல் விவகாரம் தொடர்பில் அந்நாட்டின் செல்வாக்குமிக்க சம்சோங் நிறுவனக் குழுமத்தின் தலைவரான லீ ஜே யெங் (வயது 45) கைது செய்யப்பட்டார்.

உலகின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சம்சோங் பலதரப்பட்ட மின்னியல் சாதனங்களின் தாரிப்பில் ஈட்டுபட்டுள்ளது. சியோலில் உள்ள தடுப்புக் காவல் மையத்தில் லீ ஜே யெங் வைக்கப்பட்டுள்ளார். 

அவருக்கு எதிராக புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதால் நீதிமன்றம் இந்தக் கைது ஆணையை பிறப்பித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

அதிபர் பார்க்கின் நண்பர் ஒருவரிடம் சம்சோங் குழுமத்தலைவர் லீ ஜே யெங், சுமார் 40 மில்லியன் டாலர் வரை லஞ்சம் கொடுத்ததாகவும் அரசின் கொள்கை, தம்முடைய நிறுவனத்திற்கு சாதகமாக இருக்கவேண்டும் என்ற நோக்கில் இந்த லஞ்சத்தை அவர் வழங்கியதாகவும் கூறப்பட்டது.

இவர் கைது செய்யப்பட்டிருப்பது தென்கொரிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் பங்குச் சந்தையில் சம்சோங் பங்குகளின் மதிப்பும் சரிந்தது.

கடந்த 2014ஆம் ஆண்டில் சம்சோங் அதிபர் லீ கன் ஹீயிக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவருடய மகனான லீ ஜே யெங் நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS