லங்காவி நாடாளுமன்ற தொகுதியில் துன் மகாதீர் போட்டி!

World
Typography

லங்காவி, ஏப்ரல்.16- எதிர்வரும் பொதுத்தேர்தலில் லங்காவி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் போட்டியிடப் போகிறார் அறிவிக்கப்பட்டது.   சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவிருக்கும் அதேவேளையில் பிகேஆர் கட்சியின் சின்னத்தை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை பிகேஆர் கட்சியின் தலைவரான டத்தோஶ்ரீ டாக்டர் வான் அஸீஸா செய்தார். இங்கு நடந்த கூட்டம் ஒன்றில் கெடா மாநிலத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. இந்தப் பட்டியலை துன் மகாதீர் அறிவித்தார் என்றாலும் லங்காவி தொகுதிக்கான வேட்பாளராக துன் மகாதீரின் பெயரை டாக்டர் வான் அஸீசா அறிவித்தார்.

துன் மகாதீரின் புதல்வரும் முன்னாள்  கெடா மந்திரி புசாருமான டத்தோஶ்ரீ முக்ரிஸ்  ஜெருலுன் நாடாளுமன்றத் தொகுதியிலும் ஜித்ரா சட்டமன்றத் தொகுதியிலும் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

துன் மகாதீரின் பிரிபூமி பர்சத்து கட்சியைக் கலைக்கும்படி சங்கங்களின் பதிவகம் உத்தரவிட்டுள்ள போதிலும், பக்காத்தான் ஹராப்பான் எதிர்க்கட்சி கூட்டணி ஒற்றுமையாக, ஐக்கியத்துடன் செயல்பட்டு வருகிறது வான் அஸீஸா சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS