அமெரிக்காவில் பல்லாயிரம் பிணங்கள் விழும்! - கிம் ஜோங் உன் 'கெத்து' பேச்சு

World
Typography

பியோங்பாங், ஜன.13- எத்தனை தடைகளை வேண்டுமானாலும் அமல்படுத்தட்டும்,  எவ்வளவு நெருக்குதல்களை வேண்டுமானாலும் அளிக்கட்டும், அமெரிக்காவுக்கு எதிராக 100 ஆண்டுகள் ஆனாலும் எங்களால் தாக்குப் பிடிக்க முடியும் என்று வட கொரியத் தலைவர் கிம் ஜோங் உன் அறிவித்துள்ளார்.

கிம் ஜோங் உன்னின் இந்த  'கெத்து', உள்ளூர் ஊடகத்தில் முக்கியத்துவத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.  வட கொரியாவின் ஏவுகணைச் சோதனை களுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் அனைத்துலக நாடுகள் பல்வேறு தடைகளை வடகொரியாவுக்கு  எதிராக அமல் படுத்தி இருக்கும் நிலையில் கிம்ஜோங் உன் இவ்வாறு பேசியுள்ளார்.

எங்கள் நாடு சொந்தக் காலில் நிற்கிறது. அதன் பொருளாதாரம் சுய அடிப்படையைக் கொண்டது. எங்களின் தொழில் நுட்பத்திறன்களும் அறிவியல் ஆற்றல்களும் சொந்தமாக நாங்களே உருவாக்கியவை. அமெரிக்காவின் நெருக்குதலை எங்களால்  முறியடிக்க முடியும் என்றார் கிம்.

"எத்தனை தடைகள் வந்தால் என்ன? 10 ஆண்டுகள் ஆகட்டும், 100 ஆண்டுகளே ஆகட்டும், நாங்கள் அமெரிக்காவுக்கு எதிராக நின்று தாக்குப்பிடிப்போம்" என்று அவர் சொன்னார். அமெரிக்காவின் ஒவ்வொரு நகரையும் போட்டுத் தாக்கக்கூடிய ஏவுகணைகள் எங்களிடம் உள்ளன. அமெரிக்கா ஆயுத ரீதியில் எங்களைச் சந்திக்க முனைந்தால் பல்லாயிரம் பிணங்கள் அவர்கள் நாட்டில் விழும் என்று கிம் எச்சரிக்கை விடுத்தார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS