தெருவோரம் தங்கிருந்த முதியவரை தாங்கிய ஆடவர்கள்! உடைமைகளையும் எரித்து அராஜகம்!

World
Typography

பெர்ன், நவ 14- ஜெர்மனியில் வீடில்லாமல் தெருவோரத்தில் வசித்தவரை கொடுரமாக தாக்கிய இரண்டு இத்தாலி நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். மூனிச் நகரில் உள்ள Hauptbahnhof என்னும் பகுதியில், வீடில்லாத 51 வயது முதியவர் தெருவோர மரப்பலகையில் படுத்து உறங்கியுள்ளார்.

அப்போது அங்கு வந்த இருவர் அவரை புகைப்படம் எடுத்ததோடு, தங்களோடு சேர்த்து செல்பியும் எடுத்துள்ளனர். பின்னர், அவர்களில் ஒருவன் சிகரெட்டின் மூலமாக அந்த முதியவரின் உடைமைகளை எரித்துள்ளான். அச்சமயம் அந்த வழியாக வந்த சிலர் இந்த சம்பவத்தை பார்த்து முதியவரை காப்பாற்றியுள்ளனர். குறித்த இருவரும் எஸ்பான் ரயில் வழியாக தப்பித்து சென்றுள்ளனர்.

ஆனால், அவர்களின் முகங்கள் சாலையில் இருந்த சிசிடிவி காமிராக்களில் பதிவானதால், இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். விசாரணையில், அவர்கள் இத்தாலி நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஆனால், அவர்கள் வெறும் விளையாட்டாகவே முதியவரின் உடைமைகளை எரித்ததாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதியவரை காப்பாற்றிய சிலர் சற்று தாமதமாக வந்திருந்தால், குற்றவாளிகள் அவரை எரித்திருப்பார்கள் என போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், உடைமைகளை எரித்த நபருக்கு ஆறு மாத சிறை தண்டனை அளிக்கப்பட்டது. இதே போல், கடந்த ஆண்டு பெர்லினிலும் சிரியா மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வீடு இல்லாத தெருவோரவாசிகளை தாக்கிய சம்பவம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

BLOG COMMENTS POWERED BY DISQUS