10 வயதில் 8 மாதக் கர்ப்பமா? நாட்டையே அதிர வைத்த சிறுமி!

World
Typography

மென்டோசா, ஆக.13- அர்ஜெண்டினாவில் 10 வயது சிறுமி தனக்கே தெரியாமல் 8 மாதங்கள் கர்ப்பமாக இருந்தது குறித்து பொதுமக்களிடையே கடும் விமர்சனங்கள் எழுந்ததால் நாடே அமளிப்பட்டுள்ளது.

மென்டோசாவில் வாழ்ந்து வரும் அச்சிறுமியின், இந்த நிலைக்கு காரணமான உறவினரை போலீசார் கைது செய்துள்ளனர். 

அடையாளம் வெளியிடப்படாத சிறுமி வயிற்றுவலி எனத் தனது தாயிடம் கூறியுள்ளார். உடனே தாய் மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் சிறுமியை சோதித்த மருத்துவர்கள் சிறுமி 8 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

இதனையடுத்துச்  சிறுமி மருத்துவமனையிலேயே அனுமதிக்கப்பட்டார். தான் கர்ப்பமாக இருப்பதை சிறுமி உணரவில்லை. அவர் உடல் பருமனாக இருப்பதால் 8 மாதக் கர்ப்பத்தை மற்றவர்களும் உணராததற்குக் காரணம் எனத் தெரியவந்தது. 

நீதிமன்ற விசாரணையில் சில மாதங்கள் சிறுமியின் வீட்டில் தங்கியிருந்த 23 வயது உறவினரே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. உறவினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை பரிசோதனைக்கு உட்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதேசமயம் அர்ஜெண்டினாவில் கருக்கலைப்புச் சட்டப்படி குற்றம் என்றாலும் பாலியல் துன்புறுத்தலால் கர்ப்பமடைந்தவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏதும் இல்லையெனில், கருக்கலைப்புக்கு அனுமதி வழங்கப்படும்.

ஆனால், சிறுமி எட்டு மாதக் கர்ப்பம் என்பதால் மருத்துவர்கள் கருக்கலைப்பு செய்ய முடியாது என மறுத்து விட்டனர். இந்நிலையில் இந்தப் பிரச்சினை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. குறிப்பாக, சிறுமிக்கு பிறக்கப்போகும் குழந்தை பற்றிய சர்ச்சையில் நாடே அமளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS