இராணுவத்தில் நேர மறுத்த இளம்பெண்ணுக்கு சிறைவாசம்

World
Typography

 டெல் அவிவ், ஆக. 13- இஸ்ரேல் நாட்டில் இராணுவத்தில் சேர மறுப்புத் தெரிவித்த இளம் பெண்ணை அந்த நாட்டு அரசாங்கம் சிறையில் தள்ளியது. 

இஸ்ரேல் இராணுவத்தில் சேர மறுத்த காரணத்திற்காக 19 வயதான  நோவா கெர் கோலான் இளம்பெண் தற்போது தண்டனை பெற்று இராணுவச் சிறைச் சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இவரைப் பற்றிய செய்திகள் அந்நாட்டின்  ஊடகங்களில் பரபரப்பாக வெளியிடப்பட்டன. இவர் ஒரு தேசத்துரோகி என்றும் கோழை எனவும் அங்குள்ள மக்களால் முத்திரை குத்தப்பட்டுள்ளார். 

இஸ்ரேலில் இராணுவத்தில் சேர்ந்து சேவை புரிவது என்பது சட்டமாகவே இருந்து வரும் நிலையில் இஸ்ரேலில் கொள்கைகளுக்கு தற்போதைய இளைய தலைமுறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS