கணவனை முகநூலில் விற்க முனைந்த மனைவிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! 

World
Typography

புளோரிடா, ஆக.13- அடிக்கடி தனக்கு கடுப்பேற்றிக் கொண்டிருந்த கணவரை, தனது முகநூல் மூலம் விற்கத் தயராக இருப்பதாக பதிவேற்றம் செய்த அமெரிக்கப் பெண்மணிக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி காத்திருந்தது. 

திரேசா டர்னர் என்ற பெண், தனது கணவர் ரோப் என்பவரை இணையத்தில் விற்கப் போவதாகவும் அதுவும் இலவசமாக விற்கப் போவதாகவும் அறிவித்தார்.

திரேசா டர்னருக்கு "மிசோப்பினியா" என்ற பிரச்சினை உள்ளது. அதாவது சத்தமாக உணவு அருந்துவதைக் கேட்டால் அவர் உடனே எரிச்சல் அடைந்து விடுவார். இதை அறிந்த அவரின் கணவர் ரோப் வேண்டுமென்றெ சிலர் சத்தமாக உணவருந்தும் வீடியோவை தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். 

இதைக் கேட்டு எரிச்சலடைந்த திரேசா டர்னர். அவரிடம் வீடியோவை நிறுத்தும்படி கோரியும் ரோப் மறுத்து விடவே ஆத்திரத்துடன் வேகமாக மாடிக்கு சென்ற திரேசா உடனடியாக ரோப்பை கடுப்பேற்ற, கணவர் இலவசமாக விற்பனைக்கு எனப் புகைப்படத்துடன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார். 

இதைக் கண்டு ரோப் கொஞ்சமும் கவலைப்படவில்லை. சில மணி நேரங்களில் பல திருமணமாகாத பெண்கள் ரோப்பை வாங்கிக் கொள்ள முன் வந்துள்ளனர். 

பரபரப்பாக பல பெண்கள் 'எனக்கு.. உனக்கு' எனப் போட்டிப் போட்டுக் கொண்டு அவரை வாங்க முனைந்தனர். சிலர் அதற்காக விலை கொடுக்கவும் தயாராக இருந்தனர். சிலர் வாழத் தெரியாதவள் என்று திரேசாவைத் திட்டியதோடு 'என்னிடம் கொடுத்துவிடு. அந்த ஆளை வீட்டிலேயே வைத்து நல்லபடியாக சந்தோஷப்படுத்துகிறேன்' என்றும் சிலர் பதிவு செய்தனர்.

இதனால் மீண்டும் கடுப்புக்குள்ளான திரேசா, தன்னுடைய கணவருக்கு இவ்வளவு கிராக்கி இருப்பதைப் புரிந்து கொண்டு ஒரு மன்னிப்பை பதிவு செய்ததோடு கணவருடன் சமரசமாக வாழ முடிவு செய்திருப்பதாக அறிவித்துள்ளார்.   

BLOG COMMENTS POWERED BY DISQUS