'ஒலிம்பிக் போட்டிக்குப் பின்னர் ஓடவே மாட்டேன்!' - உசேன் போல்ட்

உலக அரங்கம்
Typography

கிங்ஸ்டன், மார்ச் 22- ரியோ டி ஜெனீரோ, மார்ச் 22- பிரேசில் தலைநகரான   ரியோ டி ஜெனீரோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு தாம் ஓய்வு பெறவிருப்பதாக பிரபல ஓட்டப்பந்தய வீரர்  உசேன் போல்ட் அறிவித்திருக்கிறார்.

இந்த ஒலிம்பிக் போட்டியே தனது கடைசி போட்டி என்றும், அதன்பிறகு ஓய்வு பெறப்போவதாகவும் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசேன் போல்ட் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்கில் 6 முறை தங்கம் வென்ற உசேன் போல்ட், தமது பயிற்சியாளர் கிளன் மில்ஸ் அறிவுரையின்படி 2020ஆம் ஆண்டு தோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியுடன் ஓய்வு பெற உள்ளதாக முன்னர் அறிவித்திருந்ததார். 

ஆனால், இப்போது ரியோ ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற உள்ளதாக கூறிய 29 வயதான உசேன் போல்ட் இது பற்றி மேலும் கூறியதாவது:

'ரியோ ஒலிம்பிக் போட்டிதான் நான் பங்கேற்கும் கடைசி ஒலிம்பிக் போட்டியாக இருக்கும். இன்னும் 4 ஆண்டுகளுக்கு ஓடுவது என்பது கடினமான விஷயம். 

எனவே, ரியோ ஒலிம்பிக்குடன் ஓய்வு பெற முடிவு செய்துள்ளேன். ஒலிம்பிக்கில் மீண்டும் மூன்று தங்கம் வெல்வதே எனது மிகப்பெரிய கனவு. அதில் கவனம் செலுத்துவேன். 200 மீட்டர் தூரத்தை 19 வினாடிகளுக்குள் கடக்கவேண்டும். அந்தக் குறிக்கோளுடன் விளையாடுவேன்' என்றார் அவர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS