பார்வை குறைந்தோருக்கான டி-20 கிரிக்கெட்: பாக். வீழ்ந்தது!  இந்தியா உலகச்  சாம்பியன்! (VIDEO)

உலக அரங்கம்
Typography

பெங்களுரூ, பிப்.13- பார்வை குறையுடையோருக்கான டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்தியா தனது அபார ஆட்டத்தின் வழி பாகிஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.

முதலில் பேட்டிங்கை தொடங்கிய பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 197 ரன்கள் எடுத்து வெளியேறியது. இதில் பாகிஸ்தான் வீரர் பதார் முனிர் 37 பந்துகளில் 57 ரன்கள் குவித்து அசத்தினார். 

எனினும், அடுத்து விளையாடிய இந்திய அணி இந்த இலக்கை எட்ட கடுமையாகப் போராடியது. இந்திய வீரர் பிரகாஷ் ஜெயராமையா தனது அதிரடி ஆட்டத்தின் வழி 99 ரன்கள் எடுத்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தார்.

இவர் 15 பவுண்ட்ரிகள் அடித்தார். 60 பந்துகளில் 99 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த ஆட்டத்தில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து உலகக் கிண்ணத்தை இந்தியா வாகைசூடியது

பிரகாஷ் சிறந்த ஆட்டக்காரராக  தேர்ந்தெடுக்கப்பட்டதோடு,  இந்தப் போட்டியில் சிறந்த விக்கெட் கீப்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS