'ஆரம்பிச்சுட்டாங்கய்யா,  ஆரம்பிச்சுட்டாங்கா...!"

உலக அரங்கம்
Typography

மார்செய்ல். ஜூன் 10- உலகின் புகழ்பெற்ற கால்பந்து நாடுகளில் ஒன்றாரான இங்கிலாந்து, தனது நிறைவேறாத ஆசையாக விளங்கி வரும் ஈரோ சாம்பியன் பட்டத்திற்கு குறிவைத்து களமிறங்கியுள்ளது. 

இம்முறை திறன்பெற்ற இளம் வீரர்களை உள்ளடக்கிய அக்குழு தனது முதல் ஆட்டத்தில் ரஷ்யாவுடன் மோதுகிறது. ஆனால், இங்கிலாந்து குழு ஈரோ போட்டிக்காக பிரான்ஸ் வந்து சேர்வதற்கு முன்பே அவர்களின் கால்பந்து ரவுடி ரசிகர்கள் வந்து சேர்ந்து விட்டனர். 

'ஆரம்பிச்சுட்டாங்கய்யா...,' என்று உள்ளூர் பிரெஞ்சு மக்கள் தலையில் அடித்துக் கொண்டு அலுத்துக் கொள்கிற வகையில் ஆரம்பமாகி விட்டது கலாட்டா.

இங்கிலாந்தின் ரசிகக் கோடிகள் எங்கு போனாலும் சண்டை இல்லாமல் இருக்குமா என்ன? ஆயிரக்கணக்கில் மார்செய்ல் நகருக்கு வந்து சேர்ந்து விட்டனர். இங்கு தான் இங்கிலாந்து, ரஷ்யா, ஸ்லாவேக்கியா, வேள்ஸ் ஆகிய குழுக்களைக் கொண்ட 'பி' பிரிவு ஆட்டங்கள் நடைபெறவிருக்கின்றன.

 

வழக்கம் போலவே மது அருந்தி விட்டு தெரு முனைகளில் கலாட்டாவில் ஈடுபட்ட இங்கிலாந்து ரசிகர்கள், பின்னர் போலீசாருடன் மோதினர். பின்னர்கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தி அவர்களை போலீசார் கலைக்க நேர்ந்தது. 

இங்குள்ள இரண்டு மதுபான விடுதிகளில் நூற்றுக் கணக்கான இங்கிலாந்து ரசிகர்கள் திரண்டிருந்தனர். அவர்கள் உள்ளூர் இளளைஞர்களுடன் மோதலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

ஏற்கெனவே பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அபாயம் நிலவும் நிலையில், இங்கிலாந்து ரசிகர்களும் உள்ளூர் கும்பல்களும் மோதும் நிலை ஏற்பட்டிருப்பது பாதுகாப்புத் துறைக்குக் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS