FAM தலைவர் பதவி: துங்கு இஸ்மாயில், டான் ஶ்ரீ அனுவார் மூசா நேரடி போட்டி 

மலேசிய அரங்கம்
Typography

பெட்டாலிங் ஜெயா,  பிப்ரவரி 13-   FAM எனப்படும் மலேசிய காற்பந்து சங்கத்தின்  தலைவர் பதவிக்கு  ஜொகூர் இளவரசர்  துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயில் மற்றும் திரங்கானு கெத்தேரே தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டான் ஶ்ரீ அனுவார் மூசா  ஆகிய இருவருக்குமிடையே நேரடி போட்டி நிலவுகிறது.  

இதனை,   மலேசிய காற்பந்து சங்கத்தின்  தலைமை இயக்குனர் டத்தோ ஹமிடின் முகமது அமின் உறுதிபடுத்தினார்.  இன்று கிளானா ஜெயாவில் அமைந்துள்ள மலேசிய காற்பந்து சங்க கட்டிடத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய  ஹமிடின், இதர  இரு வேட்பாளர்களான இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் கைரி ஜமாலுடின் மற்றும்,   எப்ஃ. ஏ.எம்-மின்  உள்விவகாரத் துறை அமைச்சர் டான் ஶ்ரீ ஆசே சே மாட் ஆகிய இருவரும் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக் கொண்டுள்ளனர். 

மலேசிய காற்பந்து சங்கத்தின் தேர்தல் எதிர்வரும் மார்ச் 25-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS