பூப்பந்து விளையாட்டாளர் ரசிஃப் சிடேக் மரணமா?: அது வெறும் வதந்தி

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், பிப்ரவரி 12- நாட்டின் முன்னாள் முன்னணி பூப்பந்து விளையாட்டாளரான டத்தோ ரசிஃப் சிடேக் காலமாகிவிட்டதாக இணையத்தளங்களில் பரவிய செய்தி உண்மையில்லை என அவரது சகோதரரா  ரஷிட் சிடேக் தெரிவித்தார்.

தமது சகோதரர் தற்போது, கெந்திங் கெந்திங் மலையில் நடைபெற்று வரும் பர்ப்பெள் லீக் பேட்மிண்டன் போட்டியில் கலந்துகொண்டிருப்பதாக ரஷிட் சிடே தெரிவித்தார்.

“நேற்றிரவு தொடங்கி, நண்பர்கள் பலர் என்னைத் தொடர்புகொண்டு எனது சகோதரரின் மரணச் செய்தி குறித்து கேட்டபோது நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். அந்த செய்தி உண்மையென்றால், நான் முன்கூட்டியே அறிவித்திருப்பேன்” என ரஷிட் சிடேக் தெரிவித்தார்.

சில பொறுப்பற்ற தரப்பினர், தமது சகோதரர் ரசிஃப் மருத்துவமனை படுக்கையில் படுத்திருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவேற்றம் செய்திருந்ததை அவர் கண்டித்தார். இதுபோன்ற விவகாரங்களில் மற்றவர்களின் உணர்வுகளோடும், வாழ்க்கையோடும் விளையாடுவது நல்ல செயல் அல்ல என ரஷிட் சிடேக் தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS