சிலாங்கூர் மந்திரி புசார்  விலகல்:  கால்பந்து சங்க  இழுபறிநிலை மாறுமா?

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், டிசம்.31- உள் குழப்பதை எதிர்நோக்கி இருக்கும் சிலாங்கூர் கால்பந்து சங்க (FAS) தலைவர் பதவியிலிருந்து சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஶ்ரீ அஸ்மின் அலி விலகியுள்ளார் என்ற போதிலும் சங்கத்தில் நிலவி வரும் இழுபறி நிலையில் மாற்றம் வருமா? என்பது கேள்விக்குறி யாகவே உள்ளது.

அளவுக்கு அதிகமான அரசியல் பிரச்சனைகளில் சங்கம் சிக்கிக் கொண்டிருப்பதால் தலைவர் பதவியிலிருந்து தாம் விலகுவதாக அவர் அறி வித்தார். கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இந்தப் பதவியை அவர் வகித்து வந்தார். இது தொடர்பாக, சிலாங்கூர் கால்பந்து குழுவின் முன்னாள் நிர்வாகி யான அமிருடின் ஷாரியுடன் சேர்ந்து கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:

மாநில கால்பந்து சங்கத்தின் நிர்வாக மன்றம் அளவுக்கு அதிகமான அரசியலை நடத்திக் கொண்டிருக்கிறது. பழைய பாணியிலேயே அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மான்ய உதவித் தொகையை நம்பி மட்டுமே அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிக்கையில் அஸ்மின் அலி குறிப்பிட்டுள்ளார்.

2018-ஆம் ஆண்டில் மலேசிய கால்பந்து லீக் முழுமையாக தனியார் மயமாவதை முன்னிட்டு, அதற்கு ஏற்பத் தயாராகவேண்டும் என்று மலேசிய கால்பந்து சங்கமான எப்ஏஎம் செய்துள்ள பரிந்துரைக்கு ஏற்ப சிலாங்கூர் கால்பந்து சங்க நிர்வாகக் குழு வியூகத் திட்டங்களை வகுக்ககத் தவறி விட்டது. 

கால்பந்து மக்களிடையே ஒற்றுமையையும் நல்லெண்ணத்தையும் வளர்க்கிறது என்பதால் புதிய வழிமுறைகள் மூலம் மாநிலத்தில் கால்பந்து விளை யாட்டின் மேம்பாட்டுக்கு மாநில அரசாங்கம் தொடர்ந்து ஆதரவு அளித்துவரும் என்றார் அஸ்மின் அலி.

கால்பந்து சங்கத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வுக் காண்பதில் சிலாங்கூர் சுல்தான் தலையிட்டு உதவ வேண்டுமென்று கோரி மாநில கால்பந்து ரசிகர்கள் கிளப் அண்மையில் மகஜர் ஒன்றை சமர்ப்பித்தது. 

இதனிடையே, சிலாங்கூரின் கால்பந்து நிர்வாகத்தை முற்றாகச் சீரமைக்க வேண்டும் என்று சிலாங்கூர் ராஜா மூடா துங்கு அமிர் ஷா கோரிக்கை விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS