ரிம. 5 லட்சம் அபராதமா? மீஃபா அதிர்ச்சி! மேல்முறையிடுவோம்! -டத்தோ மோகன்

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், மார்ச். 8- பிரிமியர் லீக் கால்பந்து போட்டிக்கான பதிவுக்கான ஆவணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் சமர்ப்பிக்கத் தவறியதற்காக தங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் 5 லட்சம் ரிங்கிட்  அபராதம் விதிக்கப்பட்டிருப்பதால் அதிர்ச்சி அடைந்துள்ளது மிஃபா எனப்படும் மலேசிய இந்திய கால்பந்து சங்கம்.

இவ்வளவு அபராதத்தைச் செலுத்துவதை விட  பிரிமியர் போட்டியில் இருந்து மிஃபா விலகிக் கொள்வது மேல் என்று அதன் தலைவரான டத்தோ டி. மோகன் கூறினார். செய்த தவறோடு ஒப்பிடும் போது இந்த அபராதம் கொஞ்சமும் நியாயமற்றது என்று அவர் சொன்னார். 

மலேசிய கால்பந்து சங்கத்தின் ஓர் அங்கமான விளங்கும் எல்.எல்.பி. பிரிவு இந்த அபராதத்தை விதித்துள்ளது.  இந்த அளவுக்கெல்லாம் அபராதத் தொகை விதிக்கப்படுமானால், பிறகு இந்தப் போட்டியில் பங்கேற்கக் குழுவை அனுப்புவதில் எந்தப் புண்ணியமும் இல்லை என்று டத்தோ மோகன் குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டுக்கான பிரிமியர் லீக் போட்டிக்கான பதிவு ஆவணத்தை காலதாமதமாக சமர்ப்பித்தது அல்லது முழுமையாகப் பூர்த்தி செய்யாமல்  4 சூப்பர் லீக் குழுக்களுக்கு 15 லட்சம் ரிங்கிட் அபராதமும் 6 பிரிமியர் லீக் குழுக்களுக்கு 5 லட்சம் ரிங்கிட்டும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த அபராதத்திற்கு எதிராக மிஃபா மேல் முறையீடு செய்ய விருக்கிறது. இது கொஞ்சம் கூட நியாயமற்றது. பெரும்பாலான குழுக்கள் போட்டியில் தொடர்ந்து குழுவை பங்கேற்றுப் பொருளீட்ட முடியாமல்  போராடிக் கொண்டிருக்கின்றன என்று அவர் சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS