பி.கே.என்.எஸ். கால்பந்து குழுவுக்கு டத்தோ ராஜகோபால் பயிற்சியாளர்!

மலேசிய அரங்கம்
Typography

 

ஷாஆலம்,நவ.22-  தேசிய கால்பந்து குழுவின் முன்னாள் பயிற்சியாளரான டத்தோ கே.ராஜகோபால், பி.கே.என்.எஸ். கால்பந்து கிளப் குழுவின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

முன்னாள் தேசிய கால்பந்து வீரரான ராஜகோபால் தனது தொடக்க்க் காலத்தில் பி.கே.என்.எஸ். குழுக்கு விளையாடியவர் என்பதோடு அதன் பின்னர் அக்குழுவின் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பயிற்சியாளர் ராஜாகோபால் தலைமையில் பயிற்சிபெற்ற தேசிய குழு கடந்த 2010- ஆம் ஆண்டில் ஏ.எப்.எப். கிண்ண சாம்பியனாக வாகை சூடியது. சூப்பர் லீக்கில் விளையாடிவரும் பி.கே.என்.எஸ். குழுவுக்கு பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், குழுவின் முன்னேற்றத்தில் உடனடி அதிசயம் எதுவும் நிகழும் என்ற எதிர்பார்ப்பை வைக்கவேண்டாம் என்று ராஜகோபால் சுட்டிக்காட்டினார்.

தற்போது சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் பி.கே.என்.எஸ். குழு 7ஆவது இடத்தில் இருந்து வருகிறது. எனவே குழுவின் நிலை குறித்து உண்மையான சூழலை மனதில் கொள்ளவேண்டும் என்றும் அவர் சொன்னார்.

எனினும், வரும் ஆண்டு பி.கே.என்.எஸ். குழுவுக்கு நிச்சயமாக முன்னேற்றைக் கொண்டுவரும் ஆண்டாக அமையும் என்று எதிர்பார்க்கலாம் என்றார் அவர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS