எல்லா இனங்களையும் இணைக்க  விளையாட்டே உதவுகிறது! -பிரதமர்

மலேசிய அரங்கம்
Typography

கோலாலம்பூர், அக்.5- மலேசியாவின் வெவ்வேறான இனங்களை ஒன்றுபடுத்துவதில் முக்கிய கூறாக, விளையாட்டுத் துறை பங்காற்றுகிறது என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.

விளையாட்டுத்துறை ஒருமைப்பாட்டை விதைக்கிறது என்று குறிப்பிட்ட அவர், கடந்த ஆண்டு நடந்த தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டத்தில் 76 லட்சம் மலேசியர்கள் கலந்து கொண்டதை அவர் சுட்டிக்காட்டினார்.

நமது மக்களை விளையாட்டு, எப்படி அரசியல் எல்லைகளையும் கடந்து ஒன்றுபடுத்துகிறது? என்பதற்கு இதுவோர் உதாரணம் என்றார் அவர். இன்று புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தில் நடந்த தேசிய விளையாட்டு தினக் கொண்டாட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசிய போது பிரதமர் நஜிப் இதனைத் தெரிவித்தார்.

உணவை அதிகம் நேசிக்கும் மலேசியர்களிடையே உடல் பருமன் பிரச்சனை ஒரு முக்கிய சுகாதாரப் பிரச்சனையாக ஆகியுள்ளது. நாம் லாசி லெமாவை பெரிதும் விரும்புகிறோம். ரொட்டிச் சானாயை பெரிதும் விரும்புகிறோம். 'தே தார்ரே'யை பெரிதும் விரும்புகிறோம். ஆனால், விளையாட்டுக்களைத் தான் விரும்புவதில்லை. முதலில் நமது உடலில் அதிகக் கொழுப்பைச் சேர்த்து வைக்காதீர்கள் என்று பிரதமர் கேட்டுக்கொண்டார்.

இளைய தலைமுறையினர் அதிக அளவில் விளையாட்டுத் துறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். எதிர்கால மலேசியாவை வழிநடத்தப் போகிறவர்கள் என்ற முறையில் இது நாட்டுக்கு நல்லதாகவே அமையும் என்று அவர் வலியுறுத்தினார்.

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS