அழகிப் போட்டியிலும் அசத்துகிறார் ஓட்டப்பந்தய வீராங்கனை தனலெட்சுமி

மலேசிய அரங்கம்
Typography

 

கோலாலம்பூர், அக்.14- ஓட்டப்பந்தய போட்டிகளில் பாயும் புலியாக திகழ்ந்த போதிலும், 'மிஸ் மலேசியா' அழகிப் போட்டியில் ஒயிலாக நடைபயின்று இறுதிச் சுற்றுக்கு தேர்வாகி இருக்கிறார் ஓட்ட வீராங்கனை எம்.தனலெட்சுமி. 

பினாங்கை மாநிலத்தை சேர்ந்த 23 வயதான தனலெட்சுமி தான் தொடர்ந்து விளையாட்டுத் துறையிலும் முழு கவனம் செலுத்துவேன் என்று கூறினார். 

இவரை செல்லமாக தனா என்றும் அழைப்பர். தனா தொடர் ஓட்டப் போட்டியில் சிறந்த விரங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு மலேசியாவில் நடந்ததேறிய சீ விளையாட்டு போட்டியில் 4x400 தொடர் ஓட்டப் போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இந்தப் போட்டியில் சக வீராங்கனைகளான பேட்ரிக் பாகாவ், நூருல் பைசா, ஷெரன் சாம்சன் வெல்லபாய் மற்றும் தனலெட்சுமி ஆகியோர் பங்கேற்று வாகை சூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு துறையில் மிக ஆர்வம் கொண்டுள்ள இவர், தான் 10 வயதில் விளையாட்டுத் துறையில் கால் பதித்ததாக அவர் கூறியுள்ளார். 

மேலும் இவர் தற்போது அவர் HELP பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பைத் தொடர்ந்து வருகிறார். மேலும் இவர் தான் கோல்ப் விளையாட்டுகளிலும் ஆர்வம் காட்டி வருகிறார்.

அதுமட்டுமின்றி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும், ஆசிய ரீதியிலான ஓட்டப் போட்டிகளிலும் பங்கேற்க நான் முயற்சித்து வருகிறேன். விளையாட்டுகளில் சிறந்ததை எடுப்பது என் இலக்காக கொண்டுள்ளேன் என்றார் அவர். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS