கிளந்தான் கால்பந்து சங்கத் தேர்தல்: பீபி ராம்ஜானி சாதனை படைத்தார்!

மலேசிய அரங்கம்
Typography

 கோத்தாபாரு, செப்.18- மலேசியா கால்பந்து உலகில் புதிய வரலாறு படைத்தார் கிளந்தானைச் சேர்ந்த ஒரு பெண்மணி. கிளந்தான் மாநில கால்பந்து சங்கத்தின் (கஃபா) தலைவர் பதவிக்குப் போட்டியிட்டு ஒரு வர்த்தகரான பீபி ராம்ஜானி அலியாஷ் காஷ் என்பவர் வாகைசூடினார். 

மலேசியாவில் மாநில கால்பந்து சங்கத்தின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்டு வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றார். 

நேற்று நடைபெற்ற சங்கத் தேர்தலில், தம்மை எதிர்த்து போட்டியிட்ட டத்தோ முகமட் நாசிர் ஹம்சாவை விட இரண்டு மடங்கு வாக்குகளை கூடுதலாக பெற்று பீபி ராம்ஜானி வெற்றிபெற்றார் அவர் 32 வாக்குகள் பெற்ற வேளையில் முகமட் நாசர் 16 வாக்குகளே பெற்றார். 

கிளந்தான் மாநில கால்பந்து சங்கத்தின் விதிமுறைப்படி இரண்டு தடவைகள் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட வேண்டும். அந்த இரண்டு முறைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெறுபவர் மட்டுமே தலைவராகத் தேர்வுப் பெறமுடியும். 

அந்த வகையில் இரண்டு முறையும் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளைப் பெற்று பீபி ராம்ஜானி சங்கத் தலைவர் பதவியை கைப்பற்றினார்.    

BLOG COMMENTS POWERED BY DISQUS