செப்பாக் தக்ராவ் போட்டியில் சர்ச்சை: இந்தோ. வெளிநடப்பு!

மலேசிய அரங்கம்
Typography

 

கோலாலம்பூர்,ஆக.21- நேற்று மலேசியா மற்றும் இந்தோனேசியாவிற்கு இடையில் நடைபெற்ற மகளிர் செப்பாக் தக்ராவ் போட்டியின் போது  நடுவரின் முடிவை ஏற்றுக் கொள்ள மறுத்து இந்தோனேசிய அணி  போட்டியிலிருந்து வெளிநடப்புச் செய்தது.

29 ஆவது சீ விளையாட்டின் மகளிர் செப்பாக் தக்ராவ் போட்டி நேற்று தித்திவங்சா அரங்கில் நடைபெற்றது இதில் இந்தோனேசிய அணியும்  மலேசிய அணியும் மோதியன. 

முதல் செட்டில் 22-20 என்ற புள்ளிகளின் மலேசிய அணி கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் வெற்றி பெற்றது. . இரண்டாவது செட்டில் 16-10 என்ற புள்ளி வித்தியாசத்தில் இந்தோனேசியா முன்னணியில் இருந்தது.

எனினும், இந்தோனேசிய வீராங்கனை அடித்த 4 'சர்விஸ்'களை சிங்கப்பூர் நடுவர் ரத்து செய்தார். இதனால், கோபமடைந்த இந்தோனேசிய அணியின் பயிற்றுனர் உடனடியாக ஆடுகளத்தில் புகுந்து தனது ஆட்டக்காரர்களை அழைத்துக் கொண்டு வெளிநடப்பு செய்தார். 

அதிகாரிகள் பலர் சமரசம் செய்ய முயன்றும் அவர்கள் மறுபடியும் போட்டிக்கு வரப்போவதில்லை என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர்.

இதனிடையே, மகளிருக்கான இந்த செப்பாக் தக்ராவ் போட்டியில் 2-0 என்ற புள்ளியில் மலேசியா வெற்றியாளராக அறிவிக்கபட்டது.  நாளை நடைபெறவுள்ள அடுத்த சுற்றில் மலேசியா அணி தாய்லாந்துடன் மோதவிருக்கிறது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS