கோலாலம்பூர், ஜூலை.17– நேற்று லண்டனில் நடந்து வரும் உலக பாரா திடல் தடப் போட்டியில்மலேசிய வீரர் அப்துல் லத்தீப் ரோம்லி டி20 நீளம் தாண்டுதலில் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சாதனை படைத்தார்.
மலேசியாவுக்கான முதல் தங்கப்பதக்கத்தை நேற்று இரும்புக் குண்டு எறியும் போட்டியில் ஸீயாட் சூல்கிஃப்லி வென்றார். அதனைத் தொடர்ந்து அப்துல் லத்தீப் 7.37 மீட்டர் நீளம் தாண்டி இரண்டாவது தங்க பதக்கத்தை மலேசியாவிற்கு வென்று பெருமை சேர்த்தார்.
தொடர்ந்து குரோஷியா சோரன் டலிக் என்பவர் 7.32 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளி பதக்கமும் மற்றும் 7.12 மீட்டர் நீளம் தாண்டி டிமட்ரோ பிரட்னிகோவ் வெண்கலப் பதக்கம் வென்றார்கள்.
அடுத்த மாதம் கோலாலப்பூரில் நடைபெறவிருக்கும் சீ கேம்சில் ஸீயாட் மற்றும் லத்தீப் களம் இறங்கவிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நீளம் தாண்டுதல்:மலேசிய வீரர் தங்க சாதனை!
Typography
- Font Size
- Default
- Reading Mode