கையேட்டில் இந்தோ. கொடி தலைகீழ்: மன்னிப்புக் கேட்டார் அமைச்சர் கைரி

Sport
Typography

கோலாலம்பூர், ஆக.20- கோலாலம்பூர் சீ விளையாட்டுப் போட்டிக்காக வெளியிடப்பட்டுள்ள கையேட்டில் இந்தோனிசியாவின் தேசியக் கொடி தலைகீழாக அச்சிடப்பட்டு விட்டதற்காக இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சரும் சீ விளையாட்டு ஏற்பாட்டுக்குழு தலைவருமான கைரி ஜமாலுடின் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.

இந்தோனியாவின் விளையாட்டுத்துறை அமைச்சர் இமாம் நராவியிடம் தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக கூறிய கைரி, இந்தத் தவறு எந்த உள்நோக்கமுமின்றி நடந்து விட்டது. எனது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தத் தவறு பற்றி  சுட்டிக்காட்டியிருந்த அமைச்சர் நராவிக்கு அனுப்பிய பதில் டுவிட் செய்தியில் தமது மன்னிப்பை அவர் வெளிப்படுத்தி இருந்தார். மேலும் ஏற்பாட்டுக் குழுத்தலைவர் என்ற முறையில், எந்த நோக்கமற்ற இந்தத் தவறுக்காக அனைத்து இந்தோனிசியர்களிடமும் தாம் மன்னிப்புக் கேட்டுக்கொள்வதாக அறிக்கை ஒன்றையும் கைரி வெளியிட்டார்.

சீ கேம்ஸ் விளையாட்டு உணர்வின் அடிப்படையில் மலேசியாவுக்கும் இந்தோனியாவுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகள் மேலும் வலுப்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS