மெர்டேக்கா, மெர்டேக்கா, மெர்டேக்கா... நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மலேசியாவின் குடிமகன் என்ற பெருமையோடு நாம் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், சில சமயங்களில் யாரேனும் நம்மிடம் நாட்டைப் பற்றி கேள்வி கேட்டால், தெரிந்தவை என்றால் பதில் அளித்து விடுவோம். ஆனால், தெரியாத விசயமெனில் அப்போது தான் இணையத்தைத் தேடி செல்கிறோம்.

பொருளாதாரம், விளையாட்டுத்துறை என உலகத்தையே அசர வைத்துக் கொண்டிருக்கும் மலேசியா பற்றி நாட்டு குடிமக்களாகிய நாம் எந்தளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? நாட்டின் அடிப்படை தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறோமா? 

நாட்டைப் பற்றி எல்லாம் நமக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், எளிமையான கேள்விக்கும் நம்மால் பதில் சொல்ல முடிகிறதா? இதைப் பற்றி தெரிந்து கொள்ளவே வணக்கம் மலேசியா பிரத்தியேகமாக காணொளி ஒன்றினை தயார் செய்துள்ளது. பொதுமக்களிடம் நாடு பற்றிய கேள்விகள் கேட்கப்பட, அவர்களின் பதில்கள் என்ன? இதோ வணக்கம் மலேசியாவின் 'Oh My NegaraKu'...

மெர்டேக்கா, மெர்டேக்கா, மெர்டேக்கா... நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடைகின்றன. மலேசியாவின் குடிமக்கள் என்ற பெருமையோடு நாம் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறோம்.

ஆனால், சில சமயங்களில் யாரேனும் நம்மிடம் நாட்டைப் பற்றி கேள்வி கேட்டால், தெரிந்தவை என்றால் பதில் அளித்து விடுவோம். ஆனால், தெரியாத விசயமெனில் அப்போது தான் இணையத்தைத் தேடி செல்கிறோம்.

பொருளாதாரம், விளையாட்டுத்துறை என உலகத்தையே அசர வைத்துக் கொண்டிருக்கும் மலேசியா பற்றி நாட்டு குடிமக்களாகிய நாம் எந்தளவு தெரிந்து வைத்திருக்கிறோம்? நாட்டின் அடிப்படை தகவல்களை விரல் நுனியில் வைத்திருக்கிறோமா? 

நாட்டைப் பற்றி எல்லாம் நமக்கு தெரியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், எளிமையான கேள்விக்கும் நம்மால் பதில் சொல்ல முடிகிறதா? இதைப் பற்றி தெரிந்து கொள்ளவே வணக்கம் மலேசியா பிரத்தியேகமாக காணொளி ஒன்றினை தயார் செய்துள்ளது. பொதுமக்களிடம் நாடு பற்றிய கேள்விகள் கேட்கப்பட, அவர்கள் பதில்கள் என்ன? இதோ வணக்கம் மலேசியாவின் 'Oh My NegaraKu'...

தமிழ்ப்பள்ளி மாணவர்களிடையே சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை உலக அரங்கில் முன்னெடுத்து செல்லும் நோக்கில் ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து நடத்தும் மாணவர் முழக்கம் போட்டி மீண்டும் இவ்வருடம் தொடங்கி பீடு நடைப் போட்டுக் கொண்டிருக்கிறது. 

2011 முதல் 2014ம் ஆண்டு வரை, நாட்டில் உள்ள தமிழ்ப்பள்ளிகளில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் கண்டு அவர்களை தேசிய அளவில் அடையாளம் காட்டியபோது, அவர்களை உலக அரங்கில் அறிமுகப்படுத்தவேண்டும் என்ற எண்ணம் உதயமானது ஏற்பாட்டுக்குழுவிற்கு.

அதன் விளைவு, தேசிய போட்டியாக களம் கண்டு வந்த மாணவர் முழக்கம் கடந்த 2014ம் ஆண்டு உலக அரங்கில் காலடி எடுத்து வைத்தது. தொடங்கத்தில் சொற்போராய், குழு வாரியாக போட்டிகள் நடக்க, மலேசியாவோடு இந்தியா, சிங்கப்பூர், ஶ்ரீலங்கா என்ற மூன்று நாடுகளும் களத்தில் இறங்கின. கோலாலம்பூரில் முதல் வருட போட்டி என்றாலும் போட்யின் கடுமை அதிகம் தான். வெவ்வேறு மண் என்றாலும் தமிழ் மணம் ஒன்று தானே என்று சற்றும் சளைக்காது மாணவர்களுக்குள் நடந்த போட்டியில் தமிழ் வளர்த்த இந்தியா வெற்றி வாகை சூடியது, மகுடத்தையும் தட்டி சென்றது.

2015ம் ஆண்டு.. மாணவர் முழக்கப்போட்டியில் பெரும் மாற்றம். சொற்போராய் குழு நிலையில் போட்டியிட்ட நிலை மாறி, போட்டியாளர்களின் தனி திறமையை அடையாளம் காட்டும் வகையில், இப்போட்டி தனி நபர் பேச்சுப் போட்டியாக உருமாறியது. போட்டியின் மாற்றத்தினால் உற்சாகம் கொண்டனர் தமிழ்ப்பள்ளி மாணவர்கள். மாணவர் முழக்கம் வீர முழக்கமாய் மாறியது. 

2015ம் ஆண்டின் தேசிய வெற்றியாளர் அனைத்துலக போட்டியில் போட்டியிடுவார் என்ற உத்வேகம் மாணவர்களின் தனிநிகரற்ற பேச்சாற்றலை வெளிப்படுத்தியது. தேசிய நிலையில் கெடாவைச் சேர்ந்த மாணவி பிரியங்கா வடிவேல் மாபெரும் வெற்றியாளர் பட்டத்தைத் தட்டி சென்றார். கெடா மாநிலமே சந்தோசத்தில் திளைத்தது. இதற்கு காரணம் தன் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி சென்னையில் நடந்த அனைத்துலக மாணவர் முழக்கப்போட்டியில் மலேசியாவைப் பிரதிநிதிக்கவிருக்கிறார் என்பது தான். 

சென்னையில் அனைத்துலக போட்டி தொடங்கியபோது, மீண்டும் மலேசியாவோடு இந்தியா, சிங்கப்பூர், ஶ்ரீ லங்கா ஆகிய நாடுகள் பங்கெடுத்தன. இம்முறை தனிநபர் போட்டி என்பதால் போட்டியின் வீரியம் அதிகமாகவே இருந்தது. அனைத்துலக போட்டி சென்னையில் நடந்தபோது அங்கு கனமழை. இருந்தாலும் நான்கு நாட்டு மாணவர்களின் பேச்சு மழை பார்வையாளர்களையும் நடுவர்களையும் இலக்கிய மழையில் நனைய வைத்தது. 2015ம் ஆண்டும் தமிழின் கருவறையாம் தமிழகமே அனைத்துலக வெற்றியாளராக வாகைச் சூடியது. மலேசியா மூன்றாம் இடத்தையே பிடித்தது.

அனுபவம் கிடைத்த பிறகு, முதல் இடத்தை வெல்ல நோக்கம் கொண்ட மலேசியா மீண்டும் தேசிய நிலையில் மாணவர் முழக்கப் போட்டியை நடத்தியது. இம்முறை படைப்பாற்றலோடு மாணவர்கள் சுய சிந்தனை தன்மைக்கும் முக்கியத்துவம் தரும் வகையில், நடுவர்களின் கேள்விக்கு மாணவர்கள் உடனடியாக பதில் கூறும் அங்கம் உருவாக்கப்பட்டது. தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சளைத்தவர்களா என்ன? சற்றும் சளைக்காது நடுவர்களே பிரமிக்கும் வகையில் கேள்வி பதில் அங்கத்தில் சிறந்த படைப்பை வழங்கினர். மண்டல சுற்றுகள் முடிந்து தேசிய நிலையில் ஜொகூர் மாநிலத்தைச் சேர்ந்த ராகவி வெற்றியாளராக வாகை சூடினார்.

தேசிய நிலையில் வென்ற பின் அனைவரின் பார்வையும் அனைத்துலக போட்டி மீது திரும்பியது. இம்முறை மலேசியா வெற்றி கோப்பையைத் தட்டி செல்லவேண்டும் என்று உறுதிக் கொண்டனர். இதற்கான பிரத்தியேக பயிற்சிகளும் நடத்தப்பட்டன. 

இம்முறை அனைத்துலக மாணவர் முழக்கப் போட்டி துபாய் மண்ணில் நடந்தது. ஆனால், போட்டியில் பங்கெடுத்த நாடுகள் நான்கு அல்ல. மொத்தம் ஐந்து நாடுகள் போட்டியில் களமிறங்கின. மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், ஶ்ரீ லங்கா மற்றும் ஐக்கிய அரபு சிற்றரசும் போட்டியில் குதித்தன. போட்டி மிக கடுமையாக இருக்க, யார் வெற்றியாளர் பட்டத்தைத் தட்டி செல்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரிக்க, மீண்டும் இந்தியாவே வெற்றிக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது. மலேசியா வெற்றியாளர் கிண்ணத்தை விட்டுக் கொடுத்தாலும் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் சிறப்பான படைப்பைக் காட்டி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

அனைத்துலக அரங்கில் மலேசியாவை முதன்மைப்படுத்தவேண்டும் என்ற வேட்கையினால், ஏழாம் ஆண்டாக இவ்வாண்டும் தேசிய நிலையிலான மாணவர் முழக்கம் தொடங்கியது. இம்முறை அனைத்துலக மாணவர் முழக்கத்திற்கு மலேசியாவைப் பிரதிநிதிக்கும் போட்டியாளரை அடையாளம் காணும் வகையிலேயே போட்டியின் விதிகள் மாற்றியமைக்கப்பட்டன.

முதல் கட்ட தேர்வாக, மாணவர்கள் வழங்கப்பட்ட தலைப்பிற்கு காணொளி வடிவில் படைப்பை அனுப்ப கேட்டுக் கொள்ளப்பட்டனர். நாடு முழுவதிலிருந்தும் ஏறக்குறைய 450க்கும் மேற்பட்ட காணொளிகள் அனுப்பப்பட்ட நிலையில் அதிலிருந்து 120 காணொளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு மண்டல போட்டிகள் நடந்தன.

கோலாலம்பூர், கெடா, ஈப்போ மற்றும் ஜொகூர் ஆகிய மண்டலங்களில் போட்டிகள் நடைபெற்ற நிலையில், மண்டல போட்டிகள் இரண்டு பிரிவாக நடத்தப்பட்டன. முதல் பிரிவில் மாணவர்கள் வழங்கப்பட்ட தலைப்புக்கு தங்களின் படைப்பை வழங்கிய பிறகு நடுவர்கள் கேட்கும் கேள்விக்கு பதிலளித்தனர். பின்னர் தற்கால நடப்புகளைக் கொண்ட காணொளியைப் பார்த்து அதனைக் கிரகித்து பேசினர். இதிலிருந்து இரண்டாம் சுற்றுக்குத் தேர்வான 24 மாணவர்கள் விவாதக் களத்தில் எதிர்தரப்புடன் கருத்து மோதல் செய்தப்பின் அவர்களுக்கு காட்டப்படும் படத்தினை தலைப்போடு ஒட்டி பேசினர்.

இவ்வாறு பலப்பரீட்சைக்குப் பிறகு, ஒவ்வொரு மண்டலத்திலிருந்தும் தலா ஆறு மாணவர்கள் என மொத்தம் 24 மாணவர்கள் மாபெரும் இறுதிச் சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் கோலாலம்பூரில் நடக்கவிருக்கும் மாபெரும் இறுதிப் போட்டியில் களமிறங்குவர். 

தேசிய நிலையில் வென்று அனைத்துலக போட்டிக்கு தேர்வாகவிருக்கும் மாணவர் யார் என்பது எதிர்வரும் ஜூலை 8ம் தேதி தெரியவரும். 

கருவில் பத்து மாதம் சுமந்தது அம்மா என்றால், நாம் வளரும் வரை தோளிலும் மார்பிலும் சுமப்பது நம் அப்பா தான். அவருடைய அர்பணிப்புக்கு சிறு சமர்ப்பணமாய் விளங்குகிறது தந்தையர் தினம். அப்பாவை நினைத்துப் பார்க்க அல்ல, அவரின் அன்பை, தியாகத்தைக் கொண்டாடி மகிழ அதைப் போற்றும் நாளாகவே தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. 

உலகின் 52 நாடுகளில், ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையில் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. பிற நாடுகளில் பல்வேறு தேதிகளில் இந்த தினம் கொண்டாடப்படுகிறது.இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது அவருடன் நேரத்தைச் செலவிடுவது, அவருக்குப் பிடித்தமானவற்றை வாங்கி கொடுப்பது போன்றவை மேற்கொள்ளப்படுகிறன.

ஜூன் 19, 1910 முதல் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சோனோரா ஸ்மாட் டாட்ஸ் என்ற பெண்மணியால் இந்த தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டு தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது தந்தையைப் பற்றிய எண்ணம் அவருக்குத் தோன்றியது.  ஜூன் 19, 1910-இல் அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அன்றுமுதல் அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கொண்டாடலாம் என்ற யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார். அன்று முதல் இன்று வரை ஜூன் 19-ஆம் தேதி தந்தையர் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். 

கருவறை தெய்வம் அம்மா நமக்கு காட்டிய முதல் கடவுள் அப்பா. பிள்ளையின் பாதம் நோகக்கூடாது என்று ஒவ்வொரு வினாடியும் தன்னை வருத்தி கொண்ட அப்பா நம்மிடம் எதிர்பார்ப்பது பரிசுப் பொருட்களை அல்ல, பாசத்தினை மட்டுமே. பாசத்தை அளவின்றி காட்டுவோம். காயப்பட்ட அப்பாவின் பாதங்கள் பூக்களால் வருடப்படட்டும்.

அனைவருக்கும் தந்தையர் தின வாழ்த்துகள்.

புனித வெள்ளி என்பது கிறிஸ்துவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கின்ற ஒரு நாளாகும். கிறிஸ்துவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள், இயேசு உயிர்த்தெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படும். இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்நாளின்போது தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கி.பி 33 - 34ஆம் ஆண்டுகளிடையில் இயேசு இறந்திருக்கலாம் என்று பல அறிஞர்கள் கணிக்கின்றனர். 

இயேசு மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் பல துன்பங்கள் அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்துவர்களின் நம்பிக்கை. இந்நம்பிக்கைக்கு முக்கிய ஆதாரமாக இருப்பது விவிலிய நூல்களே.

புனித வெள்ளியன்று தேவாலயங்களில் நிகழும் ஒரு முக்கிய விசயம் சிலுவைப் பாதையாகும். தேவாலய அதிகாரபூர்வ வழிபாட்டில் இது இல்லாவிட்டாலும், கிறிஸ்துவர்கள் விரும்பி நடத்துகின்ற இந்த சிலுவைப் பாதை ஒரு இறைவேண்டலாகும். இயேசு அனுபவித்த துன்பங்களோடு மக்கள் தங்களையே ஒன்றுபடுத்திக்கொண்டு, மனத் துயர் கொண்டு, இனிமேல் நல்ல வாழ்க்கை வாழ்வதற்கு கடவுளின் அருளை இறைஞ்சுகின்ற வாய்ப்பாக இந்த சிலுவைப் பாதையை கிறிஸ்துவர்கள் எண்ணுகின்றனர்.

இயேசுவின் இறுதி நாட்களை விவிலியத்தில் உள்ள நற்செய்தி வாசகங்களில் இருப்பதை நாம் பார்க்கலாம். விவிலிய சான்றுகளை இன்றுவரை கிறிஸ்துவர்கள் பின்பற்றி வருகின்றனர்.

மக்களுக்கு பல அற்புதங்களை நிகழ்த்தி போதித்து வந்த இயேசுவை கொலை செய்யவேண்டும் என்று யூத மத போதகர்கள் திட்டம் தீட்டி வந்தார்கள். இயேசுவின் சீடரான யுதாஸ் இஸ்காரியோத்து என்பவன் அவரைக் காட்டிக் கொடுக்க அவர்களிடம் 30 வெள்ளிக் காசுகளைப் பெற்றான். பிறகு, எருசலேம் கெத்சமனி தோட்டத்தில் கோவில் காவலர்கள் இயேசுவைக் கைது செய்தனர். முதலில் அன்னாஸ் என்பவரும் பிறகு எருசலேம் கோவில் தலைமைக் குருவும் இயேசுவை விசாரித்தனர். ஆனால், இயேசு அவர்களிடம் ஒன்றும் கூறாமல் மௌனம் காத்தார்.

பிறகு உரோமை ஆளுநர் போந்தியுஸ் பிலாத்து என்பவரிடம் கொண்டு சென்றனர். விசாரணைக்குப் பின், இயேசுவை குற்றமற்றவர் என்று பிலாத்து தீர்ப்பிட்டார். ஆனால், மக்கள் அதை ஏற்க மறுத்ததால், இயேசுவைக் கசையால் அடிக்கச் செய்து அவரை விடுதலைச் செய்ய பிலாத்து முனைந்தார். அப்போதும் அமைதி அடையாத மக்கள் இயேசுவை சிலுவையில் அறைய வேண்டும் என்று கூச்சலிட்டனர். 

மக்கள் கலவரம் செய்தால் தனது ஆளுநர் பதவி பறிப்போய்விடும் என்ற அச்சத்தில் இயேசுவை சிலுவையில் அறைய பிலாத்து உத்தரவிட்டான். பிலாத்து “இவனது இரத்தப் பலியில் எனக்குப் பங்கில்லை” என்று கூறியதாக விவிலியச் சான்றுகள் தெரிவிக்கின்றன. காவலர்கள் இயேசுவின் தலையில் முள்முடியை அணிவித்து அவரை அடித்து துன்புறுத்தி, அவர் மீது சிலுவையைச் சுமத்தி கல்வாரி மலைக்கு நடக்கச் செய்தனர். அந்த இடத்திற்கு வந்ததும் இயேசுவைச் சிலுவையில் அறைந்தார்கள். அவருடைய வலப்புறத்திலும் இடப்புறத்திலுமாக இரண்டு திருடர்களையும் சிலுவையில் ஏற்றினார்கள். சில மணி நேரங்களுக்குப் பிறகு இயேசு கடவுளிடம் பிரார்த்தனைச் செய்தபின் உயிர் நீத்தார்.

இதுவே விவிலிய நற்செய்தி நூல்கள் இயேசுவின் துன்பங்கள் பற்றியும் சிலுவையில் அறையப்பட்டது பற்றியும் தரும் சான்றுகளின் சுருக்கம்.

"அங்க பாரு பாம்பு 'ஏப்ரல் ஃபூல்", இங்க பாரு டீச்சர் வராங்க 'ஏப்ரல் ஃபூல்" என்று ஆரம்பப்பள்ளி காலங்களில் அருகில் இருக்கும் நண்பர்களை ஏமாற்றுவதில் அலாதி ஆனந்தம் நமக்கு. இன்று சிறிது முதிர்ச்சியடைந்த பிறகு இதனைக் கண்டுக்கொள்ளாது போனாலும், ஏப்ரல் ஒன்றாம் தேதி ஏன் இந்த தினத்தைக் கொண்டாடுகிறார்கள் என்ற சந்தேகம் இன்னும் பலருக்கு இருந்து கொண்டே இருக்கும். 

எப்படி இந்த 'முட்டாள்கள் தினம்' உருவானது? எங்கு தொடங்கியது? இதோ சில அலசல்.

ஏப்ரல் ஃபூல் எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாதபோதும் பிரான்ஸ் நாட்டில் தான் இது முதன்முதலில் தொடங்கப்பட்டது எனத் தெரியவருகிறது. 16ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல் ஒன்றாம் தேதி புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562-ஆம் ஆண்டுகளில் அப்போதைய போப்பாண்டவரான 13-ஆவது கிரகரி, பழைய ஜூலியன் ஆண்டுக் கணிப்பு முறையை ஒதுக்கி புதிய கிரிகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப்படுத்தினார். 

இதன்படி ஜனவரி முதலாம் தேதி தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. (இன்று நாம் ஆங்கில புத்தாண்டு என்று கொண்டாடுகிறோமே அது தான் இது) எனினும் இந்த “புதிய” புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய நாடுகளும், அவற்றின் மக்களும் உடனே ஏற்றுக் கொள்ளவில்லை. 

அதற்குச் சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1852-ஆம் ஆண்டிலும், ஸ்கொட்லாந்து 1660-ஆம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நோர்வே போன்ற நாடுகள் 1700-ஆம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ஆம் ஆண்டிலும் தான் இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன. தொடக்கத்திலேயே புதிய வழக்கத்தை ஏற்றுக் கொண்டு ஜனவரி முதலாம் திகதியை புத்தாண்டாகக் கொண்டாடத் தொடங்கிய மக்கள், பழைய வழக்கில்  ஏப்ரல் முதல் தேதியைப் புத்தாண்டாக கொண்டாடியவர்களை 'ஏப்ரல் முட்டாள்கள்' என்று அழைத்தார்கள். 

இதலிருந்து தான் ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்று ஒரு ஆய்வின் மூலம் தெரியவருகிறது. இதைத் தவிர்த்து பல காரணங்கள் கூறப்பட்டாலும் அதற்குச் சான்றுகள் நிறுவப்படவில்லை.

எது எப்படியோ மற்றவர்களை ஏமாற்றி நாம் சந்தோசப்படுவதற்கு என்று ஒரு நாளை ஒதுக்கிய ஐரோப்பா மக்களுக்கு நன்றிங்க..

கோலாலம்பூர், மார்ச் 8- 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

ஆணுக்கு நிகராக பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணிநேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண்ணடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்றும் பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.

புயலாகக் கிளம்பிய பூவையரை துரும்பாக எண்ணிய அந்நாட்டு அரசன் இடியென முழங்கி, இவர்களை என் அதிகாரம் கொண்டு அடக்குவேன் என்றும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரைக் கைது செய்வேன் எனவும் அறிவித்தான்.

அரச மாளிகை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்வோம் என்று மிரட்டிய அரசனின் மெய்க்காப்பாளர் இருவரையும் திடீரென கூட்டத்தினர் பாய்ந்து தாக்கிக் கொன்றனர். இதை எதிர்பாராத அரசன் அதிர்ந்து போனான். கோரிக்கைகளை கண்டிப்பாக பரிசீலிப்பேன். உங்களுக்குச் சாதகமாக அறிவிப்பேன் என்று ஆர்ப்பாட்டத்தில் கொதித்தெழுந்தவர்களைச் சமாதானப் படுத்தினான்.

இயலாது போகவும், அரசன் லூயிஸ் பிலிப் முடிதுறந்தான். இந்தச் செய்தி ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவிட அங்கும் பெண்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். தொடர்ந்து கிரீஸில் லிசிஸ்ட்ரடா தலைமையில் ஜெர்மனி, ஆஸ்திரியா, டென்மார்க் நாடுகளைச் சேர்ந்த பெண் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆளும் வர்க்கம் அசைந்து கொடுக்கத் தொடங்கியது.

இத்தாலியிலும் பெண்கள் இதுதான் சமயம் என்று தங்களது நீண்டநாள் கோரிக்கையான வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். பிரான்சில், புருஸ்ஸியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாளாகும். அந்த மார்ச் 8 ஆம் நாள் தான் அனைத்துலக பெண்கள் நாள் உலகெங்கும் அமைய ஒரு வித்தாக அமைந்தது.

கோலாலம்பூர், பிப்ரவரி 21-   ஒரு மனிதனும்  பேசும் முதல் மொழிக்கு அவனுடைய தாய்தான் முதல் ஆசிரியை. அதுவே அவனது தாய்மொழியும் ஆகும்.  கடந்த 1999-ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு பிப்ரவரி 21-ஆம் தேதியும்  உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.  

சிறந்த கல்வி, வேலை, துறைசார்ந்த நிபுணத்துவத்தை அனைத்துலக நிலையில் வளர்த்துக்கொள்ள வேண்டியதன் அவசியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தாய்மொழியை விட  உலகமொழியான ஆங்கிலத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம்.   இதனால்,   உலகில் ஏறக்குறைய 7000  மொழிகள்  இருந்தாலும் அவைகளுள் பல மொழிகள் அழிந்து வருவதற்கு  தாய்மொழியைவிட  உலகமொழிக்குக் கொடுக்கும் முக்கியத்துவமே காரணமாகக் கூறப்படுகிறது.

எனினும் என்னத்தான் நாம் உலக மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும்,  தாய் மொழி மட்டுமே, அம்மொழி சார்ந்த மக்களின் வாழ்வியல் கூறுகளை, பண்பியல் தொன்மைகளை, புறவியல் ரீதியாகவும் அகவியல் ரீதியாகவும் உள்வாங்கி உயரச் செய்கிறது. மொழியை இழந்தவன் செத்த பிணத்துக்கு சமன் என்று கூறுவார்கள்.

அவ்வாறு, வங்க மொழியைக் காக்க உயிர் நீத்த மாணவர்களின் நினைவாக, ஆண்டுதோறும் பிப்ரவரி 21-ஆம் தேதி உலகத் தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. 

கடந்த, 1946ல், உருதுமொழியை அலுவல் மொழியாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது. ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையாக இருந்த வங்காளிகள், வங்க மொழியையும் தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என்று போராட்டத்தில் குதித்தனர்.

டாக்கா பல்கலைக்கழகம் பொரியியல் கல்லூரி, மருத்துவக்கல்லூரி மற்றும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள், இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்தினர். தாய்மொழி காக்க திரண்ட மாணவர்கள் மீது பாகிஸ்தான் அரசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. அதில் நான்கு மாணவர்கள் உயிரிழந்தனர்.

பொதுமக்கள், இளைஞர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியதையடுத்து, உருது மற்றும் வங்காளம் ஆகிய இரு மொழிகளும், அலுவலக மொழியாக அங்கீகரிக்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் பிரிந்து, வங்காளதேசம் உருவானது.

வங்க மொழி காக்க உயிர் நீத்த மாணவர்களின் நினைவு நாளான, பிப்ரவரி 21 உலக தாய்மொழி நாளாக கொண்டாட வேண்டும் என, வங்கதேசம், 28 நாடுகளின் ஆதரவுடன், ஐ.நா சபையில் கோரிக்கை வைத்தது. கோரிக்கை ஏற்கப்பட்டு, ஆண்டுதோறும் உலக தாய்மொழி தினம், பிப்ரவரி 21ல் கொண்டாடப்படுகிறது.

மலேசியாவைப் பொறுத்தவரை தமிழர்களின் தாய்மொழியைக் கட்டிக்காக்கும் முக்கிய அம்சமாகத் திகழ்ந்து வருகின்றன. அதோடு, வானொலி,  தொலைகாட்சி ஊடகங்களும், உயர்க்கல்விக்கல்விக்கூடங்களில் ஒரு துறையாகவும், இலக்கியத் துறை வளர்ச்சியிலும்  தமிழ் மொழி இடம்  பெற்றிருப்பது முக்கிய அம்சமாகும்.

எனினும், இந்நிலை தொடர்ந்து  நீடிக்க வேண்டும். ஆண்டுதோறும்  பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளியில் சேர்க்கவேண்டும் என பல்வேறு சமூக இயக்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. எனினும்,  "அம்மா’ ‘அப்பா’ என்று முதலில் சொல்லி கொடுக்குமிடம்  நம்  வீடுதான். 

தாய்மொழியை நேசிக்கும் பண்புதனை அடுத்தடுத்த தலை முறைக்குக் கொண்டு செல்லவேண்டும். நமது முன்னோர்கள், காலகாலமாய் கையில் ஏந்தி வந்து நம்மிடம் ஒப்படைத்த தாய்மொழி என்கிற தீபத்தை, நமது பிள்ளைகளிடம் நாம் ஒப்படைக்கக் கடமைப் பட்டுள்ளோம்.

தாய்மொழி தினத்தில் தமிழ்மொழி பயன்பாட்டை விதைப்போம். 

 

 

இதோ அதோ என நெருங்கி விட்டது காதலர் தினம். சமூக வலைதளங்கள், கடைகள், பேரங்காடிகள், என எங்கெங்கு காணினும் காதல் ஜுரத்தின் வெப்பத்தை உணர முடிகிறது.   இப்படி உருகி உருகி காதலிக்கும் அன்பர்களே,  இந்த நாளை உருவாக்கித் தந்த அந்த மகான் "வேலண்டைன் " பற்றி கொஞ்சம் தெரிந்துகொள்ள வேண்டாமா? 

பிப்ரவரி 14ம் தேதி மத்திய இங்கிலாந்தில் பறவைகள் மூலம் ஜோடிகளைத் தேர்வு செய்த ஆங்கிலேய பழமைவாதிகளின் இந்த நாளையே காதலர் தினமாக கொண்டாடுவதாக சிலர் கூறுகின்றனர். இருப்பினும், ரோமானிய அரசனின் ஆட்சிக் காலத்தில்தான் காதலர் தின கொண்டாட்டம் துவங்கியதற்கான சான்றுகள் உள்ளதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கிளாடிஸ் மிமி ஆட்சி புரிந்தபோது, தனது படைவீரர்களுக்கு முட்டாள் தனமாக உத்தரவு பிறப்பிப்பானாம். இந்த அரசனின் நடவடிக்கையால் படையில் சேர பலர் தயங்கினர்.

திடீரென ஒருநாள் அவன் அமைச்சர்களை அழைத்தான். ‘ரோமாபுரி நாட்டில் இனி எவருமே திருமணம் செய்து கொள்ளக்கூடாது என்று உடனே ஒரு அறிவிப்பு செய்யுங்கள். ஏற்கனவே நிச்சயித்த திருமணங்களும் ரத்து செய்யப்படுகிறது. இதை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு இருட்டுச் சிறையில் அடைக்கப்படுவார்கள். பின்னர் பொது இடத்தில் அவர்கள் கல்லால் அடித்து தலை துண்டித்து கொல்லப்படுவார்கள்’’ என்றானாம்.

இதை கேட்ட ரோமானியர்கள் அதிர்ச்சிக்கு ஆளாகினர். திருமணமானவர்கள் மனைவியை பிரிந்து வரத் தயங்குகிறார்கள். காதலிக்கும் வாலிபர்கள் காதலியை பிரிந்து வர தயங்குகின்றனர். இது இரண்டும் இல்லாவிட்டால் படையில் சேர்வார்கள் என்று அவன் நினைத்துள்ளான். பாதிரியார் வேலண்டைன் அரசனின் இந்த அறிவிப்பை மீறி இரகசியமாகத் திருமணங்களை நடத்தி வைத்தார். காதலிக்கு அனுப்பிய முதல் வாழ்த்து: இதையறிந்த மன்னன் வாலண்டைனை கைது செய்து சிறையில் அடைத்தான்.

மரணதண்டனையை நிறைவேற்ற நாளும் நிர்ணயிக்கப்பட்டது. இடைப்பட்ட காலத்தில் சிறையில் இருந்த பாதிரியார் வேலண்டைன் சிறைக் காவலர் தலைவனின் பார்வை இழந்த மகள் அஸ்டோரியசுக்கும் காதல் மலர்ந்துள்ளது.  வேலண்டைன் விடுவிக்க அஸ்டோரியஸ் முயன்றாள். இதை அறிந்த சிறைத் துறைத் தலைவன் மகளை வீட்டுச் சிறையில் வைத்தான். அனைத்து காவலையும் மீறி அட்டை ஒன்றில் காகித அட்டை ஒன்றின் மூலம் செய்தி அனுப்பினார் வேலண்டைன். இந்த வரலாறு உண்மையாக இருக்குமானால், முதல் காதலர் வாழ்த்து இதுவாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.

இந்த கடிதத்தை படிக்கும் அதே நேரத்தில் வாலண்டைன் கல்லால் அடிக்கப்பட்டு சித்திரவதை செய்த பின் வேலண்டைனின் தலை துண்டிக்கப்பட்டது. அந்த நாள் 270வது வருடம் பிப்ரவரி மாதம் 14ம் தேதி.  வேலண்டைன் ரோம் மக்களின் மனங்களில் மறையாமல் நிறைந்திருந்தார். ரோமானிய சர்ச்சுகள் ஐரோப்பியரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த போது ‘பாகான்‘ விடுமுறை தினம் அறிவிக்கப்பட்டது. இதுவே வாலண்டைன் தினமாகக் கொண்டாடப்பட்டது. சுமார் 200 ஆண்டுகளுக்கு பிறகு போப்பாண்டவர் ஜெலாசியஸ் மி வேலண்டைனை புனிதராக அறிவித்தார். அன்றிலிருந்து வேலண்டைன் தினம் காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

 

காதலர் தினத்தை முன்னிட்டு இன்று சந்தையில் பல்வேறு பரிசுப் பொருட்கள் விற்கப்படுகின்றன. அழகான ரோஜாக்கள், பூங்கொத்துகள், சாக்லெட்டுகள், கரடி பொம்மைகள், வாழ்த்து அட்டைகள் என காதலர் தின பரிசு பொருட்கள் நிரம்பி வழிகின்றன. இவற்றுள் எதை நம் துணைக்கு வாங்கிக் கொடுக்கலாம் என காதலர்கள் இந்த நேரத்திலும் கூட குழம்பிக்கொண்டிருக்கலாம். ஆனால், காதலர் தினமானது ஒரு நாள் கொண்டாட்டம் அல்ல,   பல நாடுகளில் வேலண்டைன்ஸ் டே   ஒரு வாரத்திற்குக் கொண்டாடப்படுகிறது. 

காதலர் வாரத்தின் முதல் நாள் தான் ´ரோஸ் டே´.அதாவது, பிப்ரவரி 7-ஆம் தேதி தொடங்கும். இந்நாளில் காதலர்கள் ரோஜாப் பூக்களை, அதிலும் காதலின் சின்னமான சிவப்பு நிற ரோஜாப் பூக்களை கொடுத்துக் கொள்வார்கள்.

காதல் வாரத்தின் இரண்டாம் நாளன்று காதலர்கள் ´ஐ லவ் யூ´ என்று தங்கள் காதலை வித்தியாசமான முறையில், ஆச்சரியப்படத்தக்க வகையில் வெளிப்படுத்துவார்கள். 

காதலர் வாரத்தின் மூன்றாம் நாள் தான் ´சாக்லெட் டே´. இந்நாளில் தங்கள் துணைக்கு அவர்களுக்கு பிடித்த சாக்லெட்டுகளை வாங்கிக் கொடுப்பார்கள்.

இந்நாள் பெண்களுக்கு மிகவும் ஸ்பெஷலான நாள். ஏனெனில் இந்நாள் தான் டெடி டே. பொதுவாக பெண்களுக்கு டெடி பியர் எனும் கரடி பொம்மைகள் என்றால் கொள்ளை பிரியம். இந்த நாளில் காதலன் காதலிக்கு அழகான டெடி பியர் கொடுப்பார்கள்.

இது ஒவ்வொரு காதலர்களுக்கும் மிகவும் முக்கியமான நாள். ஏனென்றால் இந்நாளில் காதலர்கள் இருவரும் தங்கள் உறவை சந்தோஷமாகவும், நம்பிக்கையுடனும் வளர்க்கும் வகையில் சத்தியம் செய்து கொள்வார்கள்.

ஹக் டே என்பது காதலர்கள் இருவரும் அனைத்தையும் மறந்து, நாம் இருவரும் எப்போதும் வாழ்நாள் முழுவதும் ஒன்றாக பிரியாமல் இருக்க வேண்டுமென்று கட்டிப்பிடித்து கொண்டாடும் நாள். காதலர் வாரத்தின் ஏழாம் நாள் தான் கிஸ் டே எனப்படும் முத்த மழை பொழியும் நாள். இந்த நாளன்று காதலர்கள் தங்கள் அன்பை முத்தத்தின் வாயிலாக வெளிப்படுத்துவார்கள்.

இறுதியில் தான் வேலன்டைன்ஸ் டே என்னும் காதலர் தினத்தைக் கொண்டாடுவார்கள். இந்நாளில் காதலர்கள் இருவரும் ஒன்றாக நேரத்தை செலவழித்து, அந்நாளை மறக்க முடியாத ரொமான்டிக் நாளாக கழிப்பார்கள்.

காதலர் தினத்தில் இவ்வளவு விஷயம் இருக்கா...? பர்சு காலியாகிவிடுமே என நீங்கள் பயந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. 

கோலாலம்பூர், டிசம்.24- கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு பற்றி அறிந்து கொள்ள வேண்டிய சில  அரிய தகவல்கள் பல உண்டு அவற்றில் சில தகவல்களை இங்கே காணலாம்...

## இயேசு கிறிஸ்து கி.மு.5ஆம் ஆண்டு, பெத்லகேம் நகரில் பிறந்தார். பெத்லகேம் என்றால் ‘அப்பத்தின் வீடு’ என்பது பொருள்.

## இயேசு என்ற பெயரின் எபிரேய மூலச்சொல்லான ‘யெஷுவா’ என்பதற்கு ‘கடவுள் விடுவிக்கிறார்’ என்றும், கிறிஸ்து என்ற கிரேக்க வார்த்தைக்கு ‘அருட்பொழிவு பெற்றவர்’ எனவும் பொருள்.

## கி.பி.240-களில் மார்ச் 28-ஆம் தேதி கிறிஸ்துப் பிறப்பு விழா கொண்டாட்டம் நிகழ்ந்ததாக, அக்காலக் கிறிஸ்துவ நாள்காட்டி குறிப்பிடுகிறது.

## டிசம்பர் 25-ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாடும் வழக்கம் கி.பி.336- ஆம் ஆண்டு ரோம் நகரில் தோன்றியது. இந்தத் தேதிக்கு, போப் முதலாம் ஜூலியஸ் அங்கீகாரம் வழங்கினார்.

## கிறிஸ்துமஸ் 'கேரல்' கீதங்கள் 4ஆம் நூற்றாண்டு முதல் தேவாலயங்களிலும், 13ஆம் நூற்றாண்டு முதல் வீதிகளிலும் பாடப்படுகின்றன.

## கிறிஸ்துமஸ் விழாவின்போது, இயேசு பிறந்த காட்சியை குடிலாக அமைக்கும் வழக்கத்தை, அசிசி புனித பிரான்சிஸ் 1223ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். 

## கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு கொடுக்கும் வழக்கம் 10ஆம் நூற்றாண்டில் தோன்றினாலும், தொப்பையும், குல்லாவும் கொண்ட 'சான்டாகிளாஸ்' 19ஆம் நூற்றாண்டில்தான் வடிவம் பெற்றார்.

## 16ஆம் நூற்றாண்டு முதலே கிறிஸ்துமஸ் விழாக்களை நட்சத்திரங்கள் அலங்கரித்து வருகின்றன.

## 15ஆம் நூற்றாண்டு முதல் வழக்கத்தில் உள்ள கிறிஸ்துமஸ் மரம், 1882ஆம் ஆண்டு முதன் முதலாக மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.