சனிக் கிரக நிலாவில் உயிரினங்கள் விஞ்ஞானிகள் உற்சாகம்!

Science
Typography

 நியூயார்க், ஏப்ரல்.14- சனிக் கிரகத்தைச் சுற்றியிருக்கும் நிலாக்களில் ஒன்றான 'இன்சிலாடஸ்' என்ற நிலாவில், உயிரினங்களுக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாக இருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருக்கின்றனர்.

பூமிக்கு அப்பாலுள்ள கிரகங்களிலேயே 'இன்சிலாடஸ்' நிலாவில்தான் உயிரினங்களின் இருப்புக்கான வாய்ப்புக் கூடுதலாக காணப்படுகிறது.

பனிப் படுகைகள் அடர்ந்த இந்த நிலா, சுமார் 500 கிலோமீட்டர் குறுக்களவைக் கொண்டது. இதன் மேற்பரப்பில் வலம்வரும் சனிக்கிரக விண்கலமான 'காசினி' அனுப்பிய புதிய ஆய்வு மதிப்பீடுகளின் அடிப்படையில் விஞ்ஞானிகள் மேற்கண்ட நம்பிக்கையை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

இன்சிலாடஸ் நிலாவிலுள்ள கடல் பகுதியில் இருந்து வானைநோக்கி மேலே பீய்ச்சி அடிக்கப்படும் நீரின் சோதனை மாதிரிகளைக் கொண்டு காசினி விண்கலம் நடத்திய இரசாயன ஆய்வில் இருந்து உயிரினங்கள் தொடர்பாக நம்பிக்கை அதிகரித்திருக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இந்த நிலாவிலுள்ள கடல்படுகையில் காணப்படும் திரவத் துவாரங்கள்,  உயிரினங்களின் தோற்றங்களுக்கு ஆதாரமாக அமையும் என்றும் ஏனெனில் பூமியில் உயிரினங்கள் தோன்றுவதற்கு கடல் படுகைத் துவாரங்கள் அடிப்படையாக இருந்துள்ளன என்றும் விஞ்ஞானி டாக்டர் ஹண்டர் வெய்ட் தெரிவித்தார்.

ஒன்றுமட்டும் நிச்சயம். இன்சிலாடஸ் நிலாவிலுள்ள கடல்கள், உயிரினங்களின் இருப்புக்கு மூலதாரமாக இருக்கும் என்ற நம்பிக்கை தோன்றியுள்ளது. இதுகுறித்து இன்னும் தீவிர ஆய்வுகளுக்கு இன்சிலாடஸ் நிலா மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்று விஞ்ஞானி ஹண்டர் சொன்னார்.

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS