பூமிக்கு 'ஹாய்' சொல்ல வருகிறது 2,000 அடி நீளம்கொண்ட விண்கல்!

Science
Typography

நியூயார்க், ஏப்ரல்.9- மூன்று வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்ட பெரிய விண்கல் ஒன்று, அடுத்த 10ஆவது நாளில் பூமிக்கு மிக அருகில் வந்து நமக்கெல்லாம் ஒரு "ஹாய்..." சொல்லிவிட்டு, நம்மைக் கடந்து செல்லவிருக்கிறது என அமெரிக்க விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா தெரிவித்துள்ளது.

அந்த விண்கல்லிற்கு '2014J025' என்று பெயரிட்டுள்ளது. சுமார் 2,000 அடி நீளம் கொண்ட இந்த விண்கல், எதிர்வரும் 19ஆம் தேதி புதன்கிழமையன்று பூமியிலிருந்து 18 இலட்சம் கிலோ மீட்டர் தொலைவில் கடந்து செல்லவிருக்கிறது.

அதாவது இது பூமியில் இருந்து நிலவுக்கான தூரத்தை விட நான்கு மடங்கு கூடுதாலான தொலைவில் இது பூமியைக் கடந்து செல்லகிறது என்றாலும் விண்வெளி மதிப்பீட்டில் இது பூமிக்கு மிக நெருக்கமான தொலைவு என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இம்மாதம் 19 ஆம் தேதி பின்னிரவில் இந்த விண்கல்லை மக்கள் காணலாம் என்று தெரிய வருகிறது.  சிறு சிறு விண்கற்கள் பூமிக்கு அருகில் கடந்து செல்வது வழக்கமானதே.

எனினும், இது போன்ற பெரிய விண்கல், பூமிக்கு மிக நெருக்கமாகக் கடந்து செல்வது மிக அபூர்வம் என்றும் என்றும் இந்த விண்கல்லால் பூமிக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு '1999AN10' என்று பெயரிடப்பட்டுள்ள பெரிய விண்கல் பூமியைக் கடந்து செல்லவிருக்கிறது. சுமார் 2 ஆயிரத்து 600 அடி நீளமுள்ள இந்த விண்கல், பூமியில் இருந்து நிலவுக்கான தொலைவு அளவுக்கு மிக நெருக்கமாகக் கடந்து செல்லும் என்று நாசா தெரிவித்துள்ளது. 

இந்நிகழ்வு சுமார் 400 வருடங்களுக்குப் பிறகே இடம்பெறவுள்ளது என்றும் இதற்கு அடுத்தபடியாக 500 வருடங்களுக்குப் பின்னரே இது போன்ற நிகழ்வு இடம்பெறும் என்றும் நாசா கூறியுள்ளது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS