டைனோசோரை அழித்த விண்கல்; புதிய தடயம் கண்டுபிடிப்பு!

இயற்கை
Typography

 நியூயார்க், டிசம்.14- சுமார் ஆறரைக் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது விழுந்த விண்கல்லின் தாக்கத்தினால் அன்றைய அசுர விலங்கின மான டைனோசோர்கள் அழிந்தது தொடர்பில் புதிய தடயங்கள் கிடைத்துள்ளன.

டைனோசோர்களின் அழிவுக்கு வழிவகுத்த அந்த விண்கல் பற்றிய தடயங்களைக் கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். தற்போது இந்த முயற்சியில் ஒரு புதிய தடயம் கிடைத்திருப்பதாக அவர்கள் நம்புகின்றனர்.

இப்போது மெக்ஸிகோ வளைகுடாவாக கருதப்படும் இடத்தில் மாபெரும் விண்கல் விழுந்ததற்கான மிகப்பெரிய பள்ளம் இருக்கிறது. இந்த விண்கல் பள்ளத்தை அனைத்துலக விஞ்ஞானிகள் குழு ஒன்று மிக ஆழமாகத்  துளையிட்டு ஆய்வு நடத்தி வருகிறது.

பூமியை தாக்கிய விண்கல்லில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று நம்பப்படும் அதிக அளவிலான நிக்கல், இங்கு பெருமளவில் இருப்பதை அவர்கள் கண்டறிந்து உள்ளனர். இந்த நிக்கல் படிமம், புதிய தடயங்களைக் கண்டறிய தங்களுக்குப் பெரிதும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்த னர்.

ஒட்டுமொத்தமாக பூமியின் உயிரினங்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இந்த விண்கல் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள வேண்டிய  அவசியம் உள்ளது. 

இது எந்த அளவுக்கு பூமியின் உயிரின அழிவுக்குக் காரணமாக இருந்தது என்பதைக் கண்டறிய முடியுமானால், எதிர்காலத்தில் இத்தகைய விண்கல்களால் ஏற்படப்போகும் பாதிப்புகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையாகச் செயல்படமுடியும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS