பூமி மாதிரியே 'புரோக்ஸிமா' கிரகம்: உயிரினங்கள் வாழ்கின்றனவா?

இயற்கை
Typography

நியூயார்க், ஆக.25- உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்புடைய தன்மையில் பூமியைப் போலவே விளங்கும் இன்னொரு கிரகத்தை கண்டுபிடித்துள்ள விஞ்ஞானிகள், பூமிக்கு ஆபத்துகள் வரும் காலங்களில் மனிதர்கள் புலம் பெயர்வதற்கு ஏற்ற கிரகம் இது என்று வர்ணித்துள்ளனர்.

இந்தப் புதிய கிரகத்தின் பெயர் 'புரோக்ஸிமா-பி' என்பதாகும். இதுபற்றிய சில தகவல்களை வெளியடாமல் வைத்திருந்த விஞ்ஞானிகள் நேற்று தான் வெளியிட முன்வந்தனர். 

புரோக்ஸிமா கிரகம் முற்றிலும் பூமியைப் போன்றதொரு கிரகமாகும். இது, புரோக்ஸிமா நட்சத்திர கூட்டமைப்பில் இடம்பெற்றி ருக்கிறது. நமது சூரியனைப் போன்ற ஒரு சூரியனை (நட்சத்திரத்தை) புரோக்ஸிமா கிரகம் ஒரு குறிப்பிட்ட தொலைவில் சுற்றிவருகிறது. பூமியைப் போன்று உயிரினங்கள் வாழ்வதற்கு உகந்தது.

குறிப்பாக, இந்த புரோக்ஸிமா நட்சத்திர மண்டலம் முழுவதுமே, உயிரினங்கள் வாழத் தக்க தன்மையைக் கொண்டிருக்கின்றது என்பது விஞ்ஞானிகளின் மதிப்பீடாகும்.

புரோக்ஸிமா நமது பூமியை விட சிறிதளவே பெரியது. தண்ணீர் வளத்தை தக்கவைத்துக் கொள்ளக் கூடிய வகையில், மிக ஏது வான குளிர் இங்கே நிலவுகிறது. இந்தத் தட்பவெப்ப நிலைதான் உயிர்கள் தோன்றி, செழிப்பதற்கு பொருத்தமான சூழல் என்கி றார்கள் விஞ்ஞானிகள்.

புரோக்ஸிமா கிரகத்தில் ஏற்கனவே உயிர்கள் இருக்கின்றனவா? என்ற கேள்வி முன்வைக்கப்பட்ட போது, அது பற்றி திட்ட வட்டமாக இப்போதைக்கு சொல்ல முடியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

ஆனால், பூமியைப் போன்று  கடல்கள், இதனுள் இருக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் இது உயிர்கள் உருவாக உதவத் தக்கது என்றும் அவர்கள் குறிப்பிட்டனர். தண்ணீர் வளம் அதன் மேற்பரப்பில் தங்கி இருப்பதற்கு தகுந்த வெப்பத்தைத் தரும் வகையில், பொருத்தமான தொலைவில் புரோக்ஸிமா கிரகம் அமைந்திருக்கிறது.

அது ஒருபுறம் இருக்க, பூமிக்கு ஆபத்து வரும் காலத்தில், அதாவது, அணுவாயுத அழிவுகள், பூமியின் மீது மோதக்கூடிய மிகப் பெரிய விண்கல் ஆபத்துகள் மற்றும் தடுக்கப் படமுடியாத நோய்களால் மனித இனம் அழியும் ஆபத்து போன்ற தருணங்களில் பூமியிருந்து புரோக்ஸிமா கிரகத்திற்கு மனிதர்கள் தப்பிச் செல்ல முடியுமா?

தற்போதைக்கு இது சாத்தியமில்லை என்றாலும் எதிர்காலத்தில் இது சாத்தியம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இந்த புரோக்ஸிமா கிரகம்  கிட்டத்தட்ட 4.27 ஒளியாண்டுகளுக்கு அப்பால் உள்ளது. 

அதாவது, ஓராண்டுக்கு ஒளி பயணப்படும் தூரத்தை வைத்துக் கணக்கிடப்படுகிறது. ஒளியின் பயண வேகம் என்பது ஒரு வினா டிக்கு 2 லட்சத்து 99 ஆயிரத்து 792 கிலோமீட்டர் என்பதால், அது ஓராண்டுக்கு எவ்வளவு தூரம் செல்கிறது என்பதை கணக்கிட்டுக் கொள்ளலாம்.

எனவே இந்த ஒளியின் வேகத்தை விட கூடுதலான வேகத்தில் பயணம் செய்யும் ஆற்றலை நாம் பெற்றால் புரொக்ஸிமாவுக்குச் செல்வது சாத்திமாகும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

'ஸ்டார்-ஸூட்' என்றழைக்கப்படும்  விண்வெளிப் பயணத்திட்டம் அடுத்த 10 ஆண்டுகளில் தீவிரமடையும். 'நானோகலம்' என்ற ழைக்கப்படும் அதிநுட்ப, ஒளியை மிஞ்சும் வேகத்திலான பயணக் கலத்தை உருவாக்கும் திட்டங்களில் விஞ்ஞானிகள் கவனம் செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS