400 ஆண்டுக்கு மேல் ஜாலியாக வாழும் பெண் சுறா! -ஆய்வுத் தகவல்

இயற்கை
Typography

லண்டன், ஆக.12- இந்தப் பூமியில், நீண்ட காலம் உயிர் வாழக்கூடிய உயிரினம், கிரின்லேண்ட் சுறா மீன்கள் தான் என விஞ்ஞா னிகள் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 28 விலங்குகள் அடையாளம் காணப்பட்டு அவற்றின் வயது விபரம் ஆராயப்பட்டதில் இந்த கிரின்லேண்ட் சுறாக்களில் ஒன்று கிட்டத்தட்ட 400 ஆண்டுகளுக்கு மேலாக ஜாலியாக வாழ்ந்து வருவது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.

இதன் வயதைக் கண்டறிய 'ரேடியோ கார்பன்' முறைப் பயன்டுத்திய விஞ்ஞானிகள், அந்தப் பெண் சுறா 400 வயதைக் கடந்து விட்டது என்பதை கண்டுபிடித்தனர். கிரின்லேண்ட் பகுதியில் இவை அதிக அளவில் இருந்து வந்ததால் இதற்கு கிரின்லேண்ட் சுறா எனப் பெயர் வந்தது.

இருப்பினும், கிரின்லேண்டுக்கு அப்பாலுள்ள கடல்களிலும் இந்த வகைச் சுறாக்கள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகை சுறா, ஆண்டுக்கு ஒரு சென்டிமீட்டர் தான் வளரும். அது இனவிருத்திக்கான பருவ வயதை எட்டுவதற்கே சுமார் 150 ஆண்டுகள் ஆகும்.

இதற்கு முந்திய ஆய்வுகளின்படி, அம்பு போன்ற தலையைக் கொண்ட ஒரு  திமிங்கலத்திற்கு 211 வயது எனப் பதிவு செய்ய ப்பட்டுள்ளது. ஆனால், புதிய ஆய்வின் வழி தற்போது இந்த பெண் சுறா தான் அதிக காலம் வாழும் உயிர் எனக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்று டென்மார்க்கைச் சேர்ந்த  கடல் உயிரியல் துறை விஞ்ஞானியான ஜுலியஸ் நெல்சன் சொன்னார்.

இந்த வகை சுறாக்கள் 5 மீட்டர் நீளம் வரை வளரக்கூடியவை. வட அட்லாண்டிக் கடலின் மிகக் குளிர்ந்த நீரின் ஆழமான பகுதியில் மிக மெதுவாக நீந்தி, பரபரப்பே இல்லாத ஒரு வாழ்க்கையை அவை வாழ்ந்து களிக்கின்றன.

அவை நீண்ட காலம் உயிர்வாழ்வதற்கு காரணம், அவற்றின் இந்த இலகுவான வாழ்க்கைச் சூழலும் அதன் வளர்ச்சி வேகம் மிக மிகக் குறைவாக இருப்பதும் தான் என்று ஜுலியஸ் நெல்சன் தெரிவித்தார்.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS