'கெப்ளர்' தொலைநோக்கி ஆய்வு: 4 கிரகங்களில் உயிரினங்களா?

இயற்கை
Typography

வாஷிங்டன், ஜுலை 20- விண்வெளியில் நீண்டகாலமாக பிரபஞ்சத்திலுள்ள கிரகங்களைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ள கெப்ளர் விண்வெளி தொலைநோக்கியை இதுவரை 104 புதிய கிரகங்களைக் கண்டுபிடித்துள்ளது. அவற்றில் 4 கிரகங்களில் மட்டும் உயிரினங்கள் வாழ்வதற்குரிய கிரகச் சூழல்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

பூமியைப் போன்ற பருவ நிலைகளையும், இதர சூழல்களையும் கொண்ட கிரகங்களைக் கண்டறிவதற்கான ஒரு முயற்சியாக, அமெரிக்க விண்ண்வெளிக் கழகமான நாசா, கடந்த 2009ஆம் ஆண்டு கெப்ளர் என்ற விண்வெளி தொலைநோக்கியை அனுப்பியது.

விண்வெளியில் நட்சத்திரங்களை கிரகங்கள் கடக்கும்போது, நட்சத்திரத்தின் வெளிச்சத்தில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு கிரகங்களின் தன்மையை கெப்ளர் ஆய்வு செய்தது. 

அந்த வகையில், கெப்ளர் அனுப்பிய தகவல்களைக் கொண்டு சூரியக் குடும்பத்துக்கு வெளியே 197 புதிய கிரகங்கள் இருக்கலாம் என்று முதலில் முடிவு செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, பூமியிலுள்ள தொலைநோக்கி மையங்கள் பலவற்றின் தகவல்களை ஒப்பிட்டு ஆய்வு செய்ததில், அந்த 197 பொருள்களில் 104 பொருள்கள் கிரகங்கள் என்பது உறுதி செய்யப்பட்டது.

அவற்றில் "கே2-72' என்ற நட்சத்திரத்தைச் சுற்றி வரும் 4 கிரகங்கள் பூமியைப் போலவே பாறைகளால் ஆனவையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறினர். பூமிக்கு 181 ஒளியாண்டுகள் தொலைவில்  இருக்கும் அந்த நட்சத்திரம், சூரியனில் பாதி அளவா கவும், குறைந்த ஒளி கொண்டதாகவும் உள்ளது. அந்தக் கிரகங்களில் உயிர்கள் வாழ்வதற்கான வாய்ப்பு இருப்பதை மறுக்க முடியாது என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS