'அல்டாபா...' : இது தான் யாஹூவின் புதிய பெயர்  

தொழில்நுட்பம்
Typography

பெங்களூர், ஜனவரி 10- யாஹூ நிறுவனம் மிகப் பெரிய மாற்றத்தை மேற்கொண்டுள்ளது. இப்போது யாஹூவின் புதிய பெயர் என்ன தெரியுமா?  அல்டாபா.  அதோடு  அதன் தலைமைச் செயல் முறை அதிகாரியையும் யாஹூ நிறுவனம் அதிரடியாக மாற்றியுள்ளது. 

ஜீமெயிலுக்குப் போட்டியாக மின்னஞ்சல் சேவைகளை வழங்கி வந்த  யாஹூ, டிஜிட்டல் விளம்பரம், மீடியா சொத்துக்கள் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தது. 

 பின்னர், வெரிசோன் நிறுவனத்திற்கு 4.83 பில்லியன் டாலருக்கு யாஹூ அதன் முக்கிய வர்த்தகமான இமெயில், விளம்பரம் மற்றும் மீடியா சொத்துக்களை விற்பனை செய்தது.   

இந்நிலையில், கடந்த ஆண்டு டேட்டா திருட்டு நிகழ்ந்துவிட்டதாக யாஹூ தெரிவித்தது. அதன் படி சுமார் 500 மில்லியன் மக்களின் இமெயில் கணக்குகள் முடக்கப்பட்டு விட்டதாகவும், இன்னொரு முறை ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டதாகவும் யாஹூ தெரிவித்தது. 

ஆனால், வெரிசோன் அதிகாரிகளோ யாஹூ மீது நம்பிக்கை உள்ளதாகக் கூறி, இந்த பிரச்சனை குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.  

இந்நிலையில், வெரிசோனுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, யாஹூ நிறுவனம் இனி அல்டாபா என அழைக்கப்படும். இதுவரை அதன் தலைமை செயல்முறை அதிகாரியாக இருந்து வந்த மரிஸா மேயர் பதவி விலகவுள்ளார்.மேலும் ஐந்து இயக்குனர்கள் பதவி விலகவுள்ளனர். மற்ற இயக்குனர்கள் அல்டாபா  நிறுவனத்தை மேற்பார்வை செய்வார்கள் .

BLOG COMMENTS POWERED BY DISQUS