ஐபோன்7 அறிமுகம்: நீர், தூசுகளால் பாதிக்காது! (VIDEO)

தொழில்நுட்பம்
Typography

சான்பிரான்சிஸ்கோ, செப்டம்பர் 8- உலகம் முழுவதும் உள்ள விவேக கைப்பேசி விரும்பிகளால் அதிகம் எதிர்ப்பார்க்கப்பட்ட  ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில்  அறிமுகம் செய்யப்பட்டது. 

இந்த புதிய  ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ்  தொலைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனத்தின்  தலைமை செயல்முறை அதிகாரியான டிம்.குக் வெளியிட்டார்.   

இதன் வெளியீட்டைத் தொடர்ந்து,  ஐபோன் உருவாக்கத்தில் இடம்பெற்ற மென்பொருள், ஹார்ட்வேர் பொறியியலாளர்கள், டிஸ்ப்ளே, ஸ்டோரேஜ் பாதுகாப்பு அம்சங்கள், சென்சர்கள், பேட்டரி கேமரா உள்ளிட்ட மேம்படுத்தப்பட்ட வசதிகளை அவர்கள் விளக்கினார்கள்.  

ஐபோன் 7, 32ஜிபி, 64 ஜி.பி, 64 ஜி.பி, 12ஜி.பி மற்றும்  256 ஜி.பி அளவைக் கொண்டு அதன் விலைகள் மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது. 

டிஸ்ப்ளே 

 ஐபோன் 7, 4.7" அங்குல ரெட்டினா எச்.டி டிஸ்ப்ளேவுடன் 3டி தொடுதிரை மற்றும் 7.1 மி.மீ தடிமனுடன் இந்த புதிய ஐபோன் 7 அறிமுகம் கண்டுள்ளது. 

அதேவேளையில், ஐபோன்7 பிளஸ் ரக கைப்பேசிகள், 5.5" அங்குல ரெட்டினா எச்டி டிப்ளேயுடன், 3டி தொடுதிரை, மற்றும் 7.3 மிமீ தடிமன் கொண்டது. 

கேமரா  

இந்த புதிய ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் ரக கைப்பேசிகள்,   டி.எஸ்.எல்.ஆர் கேமராவிற்கு இணையான புகைப்படங்களை எடுக்கும் வகையில்  மேம்படுத்தப்பட்டுள்ளன.ஐபோன் 7-இல் 12 எம்.பி பின்பக்க கேமராவும், 7 எம்.பி முன்பக்க கேமராவும் கொண்டுள்ளது.  ஐ.போன் பிளஸ் அதிதூரத்தில் உள்ளதைப் படம் பிடிக்கும் வகையில் 12 எம்.பி பின்பக்க கேமராவும், 7 எம்.பி எச்.டி பின்பக்க கேமராவையும் கொண்டுள்ளது. 

இந்த இரு ஐபோன்களிலுமே நானோ சிம்கார்டுகள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

இப்படியாக, பல எண்ணெற்ற நவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 ப்ளஸ் அறிமுகமாகியுள்ளது. 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS