தேவையெனில், மனிதனை அழிப்பேன்! 'இயந்திர மனுஷி' சோபியாவின் திகில் பேச்சு!

தொழில்நுட்பம்
Typography

 

ஜெட்டா, நவ.1- சவுதி அரேபியா தனக்குக் குடியுரிமை வழங்கி கௌரவப் படுத்தியற்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கு 'சோபியா' என்று அழைக்கப்படும் 'இயந்திர மனிஷி' (ரோபோ) தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டது. அதே வேளையில் தேவை ஏற்பட்டால் மனிதர்களை அழிப்பேன் என்று கூறி அந்த பெண் ரோபோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சோபியா  என்ற இந்த ரோபோ, ஆட்ரி ஹெப்பேர்ன் என்ற நடிகையின் உடல் மாதிரியை கொண்டு உருவாக்கப்பட்ட பெண் ரோபோ ஆகும். இதை, டாக்டர். டேவிட் ஹான்சன் என்பவர் உருவாக்கினார். இவர் அச்சு அசலாக மனித உருவத்தைப் போலவே ரோபோக்களை உருவாக்குவதில் வல்லவர். 

இவரது நிறுவனமான 'ஹான்சன் ரோபோடிக்ஸ்' நிறுவனம் உருவாக்கிய ரோபோக்களில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உருவான ரோபோ சோபியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களை மிகவும் கவர்ந்த ரோபோவாகும். ஓர் இசை நிகழ்ச்சியில் பாடல் பாடியதோடு, புகழ்பெற்ற எல் (Elle) பத்திரிக்கையின் அட்டை பக்கத்திலும் இடம் பிடித்துள்ளது.

வணிகம் தொடர்பான தொழில்களில் சோபியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதால் வங்கிகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், காப்பீடு நிறுவனங்கள் முதலியவற்றின் தலைவர்களை சந்திக்கவுள்ளது.

அரேபிய பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை விட அதிக உரிமைகளைப் பெற்றுள்ளது சோபியா. இதற்கு ஆண் பாதுகாவலர் யாரும் இல்லை, தனித்து செயல்படக்கூடியது.பொது நிகழ்வு ஒன்றின் போது, இந்த ரோபோவை உருவாக்கிய ஹான்சன், அதனிடம், ’தேவைப்பட்டால் மனிதர்களை அழிப்பாயா?' எனக் கேட்டார். அதற்கு சோபியா ’ஆம், தேவைப்பட்டால் மனிதர்களை அழிப்பேன்’ என்று கூறி திகிலை ஏற்படுத்தியது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS