இனி கூகுளுக்கு பதிலாக புதிய 'தேடு பொறி!' இந்தியாவுடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் ஆய்வு!

தொழில்நுட்பம்
Typography

 

கராக்பூர், அக்.31- கூகுளின் செயல்திறனை விட அதிக செயல்திறனும், வேகமும் கொண்ட புதிய தேடு பொறி (Search Engine) ஒன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட இருக்கிறது. இணைய ஜாம்பவனாக இருக்கும் கூகுளை முந்தும் அளவுக்கு இந்த தேடுபொறி செயல்படும் என்று கூறப்படுகிறது. 

மேலும், இந்த தேடுபொறியினை மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவுடன் சேர்ந்து உருவாக்கப்போகிறது. இதற்காக காரக்பூர் ஐ.டி.யில் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தேடுபொறி யாரும் எண்ணிப்பார்க்க முடியாத அளவில் அதிக செயல்திறனுடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த வருடம் இறுதிக்குள் இந்த தேடுபொறி பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இணைய உலகத்தில் தற்போது முடிசூடா மன்னனாக இருப்பது கூகுள் மட்டுமே. யூ-டியூப், மேப்ஸ், டிரைவ், மெயில் என் கூகுள் வெளியிட்ட எல்லா தயாரிப்புகளும் வெற்றிநடை போட்டு வருகின்றது. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிங் தேடுபொறிக்கு தற்போது மூடுவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த தேடு பொறி நமது பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களுடன் இணைந்து செயல்படும். மேலும் அங்கு மக்கள் பேசிக் கொள்ளும் விஷயங்கள், மக்கள் பயன்படுத்தும் ஹேஸ்டேக்குகள் ஆகியவற்றை கொண்டு நமது சர்ச் (Search) முடிவுகளை வெளியிடும் என்று கூறியிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நமது பேஸ்புக், டிவிட்டர் பயன்பாடுகள் மூலம் நமக்கு என்று தனியான சர் முடிவுகளை வெளியிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS