நியூயார்க், நவ.18- உலகின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் துணிந்து பயணம் செய்யலாம், கூகுள் மேப் எனப்படும் வரைபட்ட வழிகாட்டியின் வசதி மட்டும் நம்முடன் இருக்குமேயானால்..!

அந்த அளவுக்கு நமக்கு அன்றாட வழ்க்கையில் 'கூகுள் மேப்' பயன்பட்டு வருகின்றது. தற்போது இந்த வசதியை வழங்கி வரும் கைத்தொலைபேசி செயலியைப் புதிய தோற்றத்திற்கு மாற்றுவதற்கு கூகுள் முடிவு செய்து விரைவில் அறிமுகப் படுத்தவிருக்கிறது.

மேலும், தற்போது இருப்பதைக் காட்டிலும் புதிதாக அறிமுகமாகும் செயலியில் 'மேப்'புகள் மிகத் தெளிவாக அமையும் என்று தெரிய வந்துள்ளது. மேலும் பயன்படுத்துவோரின் பயணங்களுடன் தொடர்புடைய பல்வேறு அம்சங்களையும் தகவல்களையும் உள்ளடக்கியதாக இந்தப் புதிய செயலி அமையும்.

அதேவேளையில் இதன் நிறங்களிலும் மாற்றம் இருக்கும். அடுத்து வரும் ஓரிரு வாரங்களுக்குள் இந்த புதிய செயலியை கூகுள் அறிமுகம் செய்யவிருக்கிறது.

 

 

 

 

நியூயார்க். நவ.7- இப்போது VR தொழில்நுட்பம் எனப்படும் மாயத் தோற்றத்தை தரும் தொழில்நுட்பம் மிகவும் பிரபலம் அடைந்து வருகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு கூகுள் நிறுவனம் புதிய திட்டம் ஒன்றை உருவாகி வருகின்றது.

இதில் செவ்வாய்க் கிரகத்தில் நடப்பது போன்ற உணர்வை தரக்கூடிய வசதியும் உள்ளடக்கப் படவுள்ளது. எனவே எதிர்காலத்தில் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் செவ்வாய்க் கிரகத்திற்கு பயணித்த அனுபவத்தினை இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமாக பெறமுடியும். 

'கியூரியோசிட்டி ரோவர்' விண்கலத்தின் உதவியுடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களைக் கொண்டு முப்பரிமாண முறையில் காட்சிகள் உள்ளடக்கப் படவுள்ளன.

 இதேவேளை, செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண வீடியோவை வெளியிட்டுள்ள நாசா நிறுவனம், 2030-ஆம் ஆண்டளவில் VR தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைவருக்கும் செவ்வாய்க் கிரகத்தினை பார்த்து ரசிக்கும் வரத்தை வழங்க தீர்மானத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஜெட்டா, நவ.1- சவுதி அரேபியா தனக்குக் குடியுரிமை வழங்கி கௌரவப் படுத்தியற்காக அந்நாட்டு அரசாங்கத்திற்கு 'சோபியா' என்று அழைக்கப்படும் 'இயந்திர மனிஷி' (ரோபோ) தன்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டது. அதே வேளையில் தேவை ஏற்பட்டால் மனிதர்களை அழிப்பேன் என்று கூறி அந்த பெண் ரோபோ அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

சோபியா  என்ற இந்த ரோபோ, ஆட்ரி ஹெப்பேர்ன் என்ற நடிகையின் உடல் மாதிரியை கொண்டு உருவாக்கப்பட்ட பெண் ரோபோ ஆகும். இதை, டாக்டர். டேவிட் ஹான்சன் என்பவர் உருவாக்கினார். இவர் அச்சு அசலாக மனித உருவத்தைப் போலவே ரோபோக்களை உருவாக்குவதில் வல்லவர். 

இவரது நிறுவனமான 'ஹான்சன் ரோபோடிக்ஸ்' நிறுவனம் உருவாக்கிய ரோபோக்களில் மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தில் உருவான ரோபோ சோபியா என்பது குறிப்பிடத்தக்கது.

ஊடகங்களை மிகவும் கவர்ந்த ரோபோவாகும். ஓர் இசை நிகழ்ச்சியில் பாடல் பாடியதோடு, புகழ்பெற்ற எல் (Elle) பத்திரிக்கையின் அட்டை பக்கத்திலும் இடம் பிடித்துள்ளது.

வணிகம் தொடர்பான தொழில்களில் சோபியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதால் வங்கிகள், வாகன உற்பத்தி தொழிற்சாலைகள், காப்பீடு நிறுவனங்கள் முதலியவற்றின் தலைவர்களை சந்திக்கவுள்ளது.

அரேபிய பெண்களுக்கு இருக்கும் உரிமைகளை விட அதிக உரிமைகளைப் பெற்றுள்ளது சோபியா. இதற்கு ஆண் பாதுகாவலர் யாரும் இல்லை, தனித்து செயல்படக்கூடியது.பொது நிகழ்வு ஒன்றின் போது, இந்த ரோபோவை உருவாக்கிய ஹான்சன், அதனிடம், ’தேவைப்பட்டால் மனிதர்களை அழிப்பாயா?' எனக் கேட்டார். அதற்கு சோபியா ’ஆம், தேவைப்பட்டால் மனிதர்களை அழிப்பேன்’ என்று கூறி திகிலை ஏற்படுத்தியது.

 

 

கராக்பூர், அக்.31- கூகுளின் செயல்திறனை விட அதிக செயல்திறனும், வேகமும் கொண்ட புதிய தேடு பொறி (Search Engine) ஒன்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வெளியிடப்பட இருக்கிறது. இணைய ஜாம்பவனாக இருக்கும் கூகுளை முந்தும் அளவுக்கு இந்த தேடுபொறி செயல்படும் என்று கூறப்படுகிறது. 

மேலும், இந்த தேடுபொறியினை மைக்ரோசாப்ட் நிறுவனம் இந்தியாவுடன் சேர்ந்து உருவாக்கப்போகிறது. இதற்காக காரக்பூர் ஐ.டி.யில் உள்ள ஆராய்ச்சியாளர்களுடன் சேர்ந்து ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தத் தேடுபொறி யாரும் எண்ணிப்பார்க்க முடியாத அளவில் அதிக செயல்திறனுடன் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த வருடம் இறுதிக்குள் இந்த தேடுபொறி பயன்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இணைய உலகத்தில் தற்போது முடிசூடா மன்னனாக இருப்பது கூகுள் மட்டுமே. யூ-டியூப், மேப்ஸ், டிரைவ், மெயில் என் கூகுள் வெளியிட்ட எல்லா தயாரிப்புகளும் வெற்றிநடை போட்டு வருகின்றது. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிங் தேடுபொறிக்கு தற்போது மூடுவிழா நடத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த தேடு பொறி நமது பேஸ்புக், டிவிட்டர் பக்கங்களுடன் இணைந்து செயல்படும். மேலும் அங்கு மக்கள் பேசிக் கொள்ளும் விஷயங்கள், மக்கள் பயன்படுத்தும் ஹேஸ்டேக்குகள் ஆகியவற்றை கொண்டு நமது சர்ச் (Search) முடிவுகளை வெளியிடும் என்று கூறியிருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் நமது பேஸ்புக், டிவிட்டர் பயன்பாடுகள் மூலம் நமக்கு என்று தனியான சர் முடிவுகளை வெளியிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

 

More Articles ...