'நெபுரு' கிரகம்; பூமியை அழிக்கப் போகிறதா? -நாசா திட்டவட்ட மறுப்பு!

Science
Typography

நியூயார்க், அக்.30- 'நிபுரு' என்ற கோள் காரணமாக நவம்பர் 19-ஆம் தேதி பூமியில் பேரழிவு ஏற்படும் என்று வெளியான தகவலை நாசா ஆய்வு மையம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.  'பிளானெட் எக்ஸ் டாட் கம்' (planet x.com) என்ற தளத்தில் அண்மைய காலமாக நிபுரு கோள் பற்றிய செய்திகள் வெளியாகி வருகிறது.

அதாவது, இந்த ‘நிபுரு’ ஒரு கருப்பு நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வாயுக் கோளம் என்றும் நட்சத்திரமாக மாற முயற்சித்து தோல்வியடைந்தால், அது வாயு கோளமாக மாறியது என கூறப்படுகிறது. சூரியக் குடும்பத்தில் கடைசியாக இருக்கும் இந்த கோள் சூரியனை சுற்றி வர 3,600 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது.   

தற்போது இந்த நிபுரு கோளின் ஈர்ப்பு சக்தி காரணமாக பூமியில் பூகம்பம் ஏற்படுவதும், எரிமலைகள் வெடிப்பதும் அதிகரிக்கும். இறுதியாக வரும் நவம்பர் 19ம் தேதி  மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும் எனச் செய்தி வெளியானது. இந்த பூகம்பத்தால், பிரான்ஸ், இத்தாலியிலிருந்து அலாஸ்கா மற்றும் ரஷ்யா வரையும், அமெரிக்க மேற்கு கரையோர பகுதியிலும், இந்தோனேசியா, ஜப்பான் போன்ற பகுதிகளிலும் கோடிக்கணக்கில் உயிரிழப்பு ஏற்படும் என டெரல் கிராப்ட் என்ற எழுத்தாளர் தெரிவித்தார்.

இந்தத் தகவலை அமெரிக்காவின் நாசா மையம் முற்றிலும் மறுத்துள்ளது. நிபுரு என்ற  கோள் எதுவும் கிடையாது. இவை அனைத்தும் வதந்திகள். நவம்பர் 19 ஆம் தேதி மிகப் பெரியளவில் பூகம்பம் ஏற்படும் என்பதற்கு எந்த அடிப்படை ஆதாரமும் இல்லை என்று நாசா விளக்கியது.

‘நிபுரு’ என்ற கோள் உண்மையாக இருந்திருந்தால், அதை விண்வெளி விஞ்ஞானிகள் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடித்திருப்பர் எனவும் நாசா தெரிவித்தது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS