தலைக்கு மேலே ஆபத்து: பூமி மீது மோதுகிறது சீன விண்வெளி நிலையம்!

Science
Typography

பெய்ஜிங், அக்.20- சீனாவிற்கு சொந்தமான டியாங்கோங்-1 என்ற விண்வெளி ஆராய்ச்சி நிலையம் பூமியின் மீது எப்போது வேண்டுமானாலும் மோதலாம் என அந்நாட்டு விண்வெளித் துறை தெரிவித்துள்ளது. 

சில வருடங்களுக்கு முன் விண்வெளி ஆராய்ச்சிக்காக கட்டப்பட்ட இந்த ராட்சச விண்வெளி நிலையமானது தற்போது பூமியின் மீது விழும் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

தனது கட்டுப்பாட்டை இழந்துள்ள இந்த விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை எவ்வளவு முயன்றும் நிறுத்த முடியாததால், அது எப்போது வேண்டுமானாலும் பூமியிம் மீது வந்து விழும் என அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சி துறை கூறுகிறது.

கடந்த 2011ஆம் ஆண்டு சீனாவின் தேசிய விண்வெளி ஆராய்ச்சி துறை விண்வெளியில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை காட்டும் பணியில் இறங்கியது. உலகில் மிக முக்கியமான நாடுகள் மட்டுமே விண்வெளியில் ஆராய்ச்சி நிலையங்கள் கட்டியுள்ளன. 

அந்த வகையில் ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பெரிய அளவில் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை கட்ட சீனா முடிவு எடுத்தது.

இதையடுத்து 201ஆம் ஆண்டின் இறுதியில் அந்நாட்டு விண்வெளித் துறை தனது டியாங்கோங்-1 என்ற முதல் கட்ட ராட்ஷச ஆராய்ச்சி நிலையத்தை விண்வெளியில் வெற்றிகரமாக கட்டி முடித்தது. இது அந்நாட்டின் நிலவு மற்றும் செவ்வாய்க் கிரக ஆராய்ச்சிக்காக பயன்படும் என்று கூறப்பட்டது.

தற்போது இந்த விண்கலம் பூமியில் இருந்து மிகவும் தூரமான இடத்தில் இருப்பதாகவும், அது பூமியை நோக்கி 27,000 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதத்தில் அது எப்படியும் பூமியை வந்தடையும் என்று கூறுகின்றார். இது பூமியை நெருங்கும் போது பல பாகங்கள் எரிந்து அழிந்து போய் இருக்கும். ஆனாலும் சில பாகங்கள் பூமியில்  வந்து விழும் வாய்ப்புகள் இருப்பதாக சீனாவின் விண்வெளி ஆராய்ச்சி துறை கூறுகிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS