இளைஞர்களின் இரத்தத்தைச் செலுத்தி முதியோருக்கு இளமையா? கடும் சர்ச்சை!

Science
Typography

 சான் பிரான்சிஸ்கோ, ஆக.25- இளமையை மீட்க இளைஞர்களின் இரத்தத்தை முதியவர்களுக்குச் செலுத்தும் புதிய சிகிச்சை முறையால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்த்த புதிய நிறுவனம் ஒன்று, வயதானவர்கள் தங்கள் உடலில் இளைஞர்களின் இரத்தத்தை ஏற்றிக் கொண்டால் நீங்கள் உத்வேத்துடன் செயல்படலாம். இதில் விருப்பம் உள்ளவர்கள் 8,000 அமெரிக்க டாலர் கொடுத்து இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளுங்கள் என அழைப்பு விடுத்தது. 

வயதானவர்களுக்குப் புத்துணர்ச்சி ஏற்படுத்துவது குறித்த சோதனை முயற்சியாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இவர்களது, உடலில் இளைஞர்களிடமிருந்து எடுக்கப்பட்ட 25 லிட்டர் பிளாஸ்மா செலுத்தப்பட்டது. 

மனித இரத்தத்திலிருந்து சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், இரத்த அணுத்தட்டுகள் மற்றும் பிற அணுக்கள் பிரித்தெடுக்கப்பட்டவுடன், மீதமிருக்கும் ஒரு திரவத்திற்குத் தான் பிளாஸ்மா என்று பெயர். 

இதில், 60க்கும் மேற்பட்ட முதியவர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின் முதல் கட்ட முடிவுகள் உற்சாகம் அளிப்பதாக உள்ளன என ஸ்டாம்போர்டில் பயிற்சி பெற்ற ஆராய்ச்சியாளரும், யு.எஸ் மருத்துவமனையின் நிறுவனருமான 32 வயதாகும் ஜெஸ்ஸி கர்மாசின் தெரிவித்துள்ளார். 

தோற்றம், நீரிழிவு நோய், இதய செயல்பாடு அல்லது நினைவாற்றல் ஆகியவற்றை மேம்படுத்த இது உதவும். ஏனெனில், இவைதான் வயதாவதனால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் முக்கியமானவை என்று கூறியுள்ளார்.

இருப்பினும், எலிகளை வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வுகள் எப்படி மனிதனுக்கு ஏற்புடையதாக இருக்கும் என பல ஆராய்ச்சியாளர்கள் விமர்சித்துள்ளனர். மேலும், இதில் பல நெறிமுறை தவறுகள் இருப்ப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS