ஆக.21 இல் தோன்றுகிறது ‘கறுப்பு நிலா’ உலக அழிவுக்கு ஒரு முன் அறிகுறியா?

Science
Typography

 

நியூயார்க், ஆக.18- எதிர்வரும் ஆகஸ்டு 21ஆம் தேதியன்று சூரிய கிரகணம் ஏற்படவிருக்கிறது. இந்த சூரிய கிரகணத்தால் “கறுப்பு நிலா” வானில் தென்படும். இதனை அமெரிக்காவின் பல இடங்களில் காண முடியும். இந்த உலகின் அழிவு நெருங்கி விட்டதை இந்தக் கறுப்பு நிலா காட்டுவதாக சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் பீதியைத் தெறிக்க விட்டிருக்கின்றனர். 

உலகில் நான்கு வகையான முறையில் கறுப்பு நிலா தென்படும். 21 ஆம் தேதி தென்படவிருக்கும் கறுப்பு நிலா மிக மிக அபூர்வமானது. இதனைக் கண்களுக்கு விருந்து என்று மட்டும் கருதிக் கொண்டிருக்க வேண்டாம். உலக அழிவின் தொடக்கம் என கிறிஸ்துவ சமயத்தின் ஒரு பிரிவினர் நம்புவதாக செய்திகள் பரவியுள்ளன.

இந்தக் கறுப்பு நிலாவின் தோற்றம் என்பது ஏதோ விண்வெளியில் நிகழும் வினோதம் என்று எண்ணாதீர்கள். இது கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை என்கிறார் ‘கடவுளின் கால விதி’ என்ற நூலை எழுதிய மார்க் பிலிட்ஷ்.

மேலும் கறுப்பு நிலா தென்பட்ட சில காலத்திற்குப் பின்னர் ‘மேஜிக்கல் கிரகம்-10’ என்றழைக்கப்படும் கோள் ஒன்று பூமியின் மீது மோதவிருக்கிறது. இதுதான் உலக அழிவுக்கு வித்திடும் என்று கிரகங்கள் தொடர்பான ஆய்வை நடத்தி வரும் டேவிட் மியெட் என்பவர் கூறுகிறார்.

'உலக அழிவின் அறிகுறிகள்' என்ற தலைப்பில் தொடர்ந்து வானொலிச் சேவையை நடத்தி வருபவரான பாதிரியார் பால் பெக்லி, கறுப்பு நிலா என்பது இறைவன் காட்டும் அறிகுறி என்கிறார் 

இந்தச் சூரிய கிரகணத்தின் போது  சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நேர்கோட்டில் வரும் நிலா, பூயின் பார்வையில் இருந்து சூரியனை முற்றாக மறைப்பதால்,  நிலா இருள் படிந்து காணப்படும். 

'இந்த உலகம் அழிவின் விளிம்பை நோக்கிச் செல்கிறது என்ற கருத்தை யாராவது சொல்லத் தானே வேண்டும். அந்த அபாயச் சங்கினை நானே ஊதவேண்டியதாயிற்று' என்று பாதிரியார் பால் பெக்லி சொன்னார்.

                                                                                    # பூமி மீது மோதவிருக்கும் நபிரு கிரகம்...

இந்த மேஜிக்கல் கிரகத்திற்கு ‘நிபிரு’ என்பதே உண்மைப் பெயர். சூரியக் கிரகணம் நிகழ்ந்து, நிலா கருமை அடையும் சம்பவம் நடந்த முடிந்த பின்னர் சிறுது காலத்தில் இந்த நிபிரு கிரகம், பூமியைத் தாக்கும் என்கிறார் அவர். 

அமெரிக்காவிலுள்ள 12 மாநிலங்களில் நிலா முற்றிலுமாக இருளடையும் காட்சியை  இந்த கறுப்பு நிலாவாகக் காட்சி தருவதைக் காணமுடியும் என்று டேவிட் மியெட் சொல்கிறார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS