நிலவில் தண்ணீர் வளம்: புதிய உற்சாகத்தில் விஞ்ஞானிகள்!

Science
Typography

பாரிஸ், ஜூலை.25- மனிதர்கள் வாழ முடியாத அளவுக்கு 'வரட்சி' கிரகமாக கருதப்பட்டு வந்த நிலவில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்ற புதிய தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர்.

பூமியிலிருந்து நிலவுக்கு செல்லும் ஆராய்ச்சியாளர்கள் பின்னாளில் அங்கு தங்கியிருப்பதற்கு தேவையான தண்ணீர் வளத்தைப் பெறமுடியும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறினர்.

துணைக்கோள ஆய்வுகலைன் அடிப்படையில், கிடத்த தகவல், நிலவின் உட்புறப்பகுதியில் கிரக மேற்பரப்புக்கு கீழே தண்ணீர் வளம் இருப்பதற்கான தடயங்கள் இருக்கின்றன என்று அமெரிக்காவின் புரோவ்ன் பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் ஆய்விலிருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது என விஞ்ஞானி ஷுவாய் லீ சொன்னார்.

நிலவிலுள்ள பல எரிமலைப் படிவங்களுக்கு இடையே கணிசமான தண்ணீர் வளம் சிக்குண்டு இருப்பதாகவும் இது தற்போது ஒரு நம்பிக்கை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் சொன்னார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS