குளோனிங் முறையில் ‘சூப்பர் நாய்கள்!’ அடுத்து ‘சூப்பர்' மனிதர்களா...?

Science
Typography

பெய்ஜிங், ஜூலை.18- குளோனிங் முறையில் பல மடங்கு வலிமையான 'சூப்பர்' மனிதர்களை உருவாக்கும் முயற்சிக்கு முன்னோடியாக சக்திமிக்க நாய்களை சீனா உருவாக்கி இருப்பதாக பரபரப்பான தகவல் வெளியாகி இருக்கிறது. 

அறிவியல் வளர்ச்சியில் நாளும் ஒரு கண்டுபிடிப்பில் ஈடுபட்டு வரும் மனிதகுலம், மனித சக்திக்கு மாற்றாக பல மடங்கு வேகத்துடன் செயல்படும் 'ரோபோ'க்களை உருவாக்கி வருகிறது.

அந்த ரோபோக்களை கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யவும், மருத்துவமனைகளில் உதவிக்காகவும், ஆபத்தான வேளைகளிலும் எந்திர சக்தியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஒரு சில நாடுகளின் மருத்துவமனையில், ரோபோக்களே அறுவைச் சிகிச்சை செய்யும் அளவுக்கு உருவாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், சீனா ‘குளோனிங்’ முறையில் ஆற்றல்மிக்க நாய்களை உருவாக்கியுள்ளது. இது இயற்கையான நாய்களை விட பல மடங்கு வலிமையான தசைநார்களுடன் விளங்குகிறது. மேலும் இந்த நாய்கள் பல மடங்கு வேகத்துடனும் சக்தியுடனும் செயல்படுகின்றன.

மொத்தம் 27 ‘சூப்பர் நாய்கள்’ உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றில் மரபணு இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள சூப்பர் நாய்க்கு ‘லிட்டில் லாங் லாங்’ என பெயரிடப்பட்டுள்ளது.

தென்கொரியாவுக்குப் பிறகு குளோனிங் முறையில் வலிமை வாய்ந்த ‘சூப்பர் நாய்’களை வெற்றிகரமாக உருவாக்கியுள்ள இரண்டாவது நாடு சீனா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாய்களின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வலிமை வாய்ந்த ‘சூப்பர் மனிதர்’களை உருவாக்கி, அவர்களை படை வீரர்களாக இராணுவத்தில் பயன்படுத்தவும் சீனா திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

குளோனிங் முறையில் நாய்களை உருவாக்குவதுதான் கடினம் என்ற நிலையில் சீனா, ‘குளோனிங் நாய்’களை உருவாக்கியுள்ளதால், மனிதர்களை உருவாக்குவது கடினமாக இருக்காது என்றும் மரபணு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS