பருவநிலை உடன்பாடு: டிரம்ப் செய்த  முட்டாள்தனம்! -விஞ்ஞானி சாடல்

Science
Typography

லண்டன், ஜூன்.23- உலக நாடுகள் அனைத்தும் ஏற்று, ஒப்புக்கொண்ட பாரிஸ் பருவநிலை உடன்பாட்டிலிருந்து  வெளியேறியதன் வழி அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்ட் டிரம்ப் முட்டாள்தனமான மிகப்பெரிய தவறைச் செய்துவிட்டார் என்று பிரபல பிரிட்டீஷ் விஞ்ஞானி ஸ்டிபன் ஹக்கிங் சாடியுள்ளார்.

வரலாற்று ரீதியில் இதுவொரு மாபெரும் தவறாக முடியும். வருங்கால சந்ததியினர் மிகுந்த அதிருப்தியுடன் டிரம்ப் எடுத்த முடிவு பற்றி சிலாகிக்கக் கூடும். அமெரிக்கா போன்ற பொறுப்புமிக்க 

நாட்டில் டிரம்ப் போன்ற தலைவர் ஒருவர், இப்படி உலகின் மீது அக்கரையற்ற முடிவை எடுக்க முடியமா? என்று எதிர்காலத் தலைமுறை வியக்கக்கூடும் என்று ஹக்கிங் சொன்னார்.

பூமியைப் பாதிக்கூடிய பருவநிலை மாற்றங்கள், மக்கள் தொகை அதிகரிப்பு, மற்றும் போர்களால் பூமி பல அழிவுகளைச் சந்தித்து வருகிறது. பூமியின் சமநிலையைப் பாதுகாக்க இயற்கை அறிஞர்கள் போராடிவரும் நிலையில் கடந்த ஆண்டிலேயே அமலுக்கு வந்து விட்ட பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா எப்படி வெளியேற முடியும்? என்று ஹக்கிங் கேள்வி எழுப்பினார்.

சீனா, இந்தியா மற்றும் ஐரோப்பிய உள்பட உலகில் 145 நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பருவநிலை மாற்றங்கள் உள்ளிட்ட காரணங்களால் பூமியில் மனிதர்கள் வாழமுடியாத நிலைவரும் என்பதால் பூமியை விட்டு வேறு கிரகங்களுக்கு குடியேற முயற்சிகள் எடுக்கவேண்டும் என்று பௌதிக ஆராய்ச்சியாளருமான ஹக்கிங் ஏற்கெனவே வலியுறுத்தி வருகிறார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS