10 கிரகங்களில் வேற்றுக் கிரக வாசிகள்! நம்பிக்கை விதைத்த நாசா! 

Science
Typography

 நியூயார்க், ஜூன்.21- பூமிக்கு அப்பால், 219 கிரகங்களில் உயிரினங்களுக்கான சாத்தியங்கள் இருப்பதாக பட்டியல் போட்டுள்ள நாசா விண்வளி ஆய்வுக் கழகம், இவற்றில் 10 இடங்களில் வேற்றுக் கிரகவாசிகள் வாழ்ந்துவரக் கூடும் என்று தெரிவித்திருக்கிறது.

வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிடப் போவதாக அண்மையில் நாசா அறிவித்திருந்தது. அதன்படி அது நேற்று வெளியிட்ட அந்த அறிக்கையில் இந்தப் புதிய தகவல்களை தெரிவித்துள்ளது.

வேற்றுக் கிரகவாசிகள் வாழ்ந்துவரக்கூடும் என நாசா சுட்டிக்காட்டியுள்ள அந்த 10 கிரகங்களும் கிட்டத்தட்ட பூமியைப் போன்ற தட்ப வெப்ப நிலையைக் கொண்டிருக்கின்றன. அளவிலும் அவை பூமிக்கு ஈடாகவே உள்ளன.

கடந்த 2009-ஆம் ஆண்டில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 'கெப்ளர்' விண் தொலைநோக்காடியின் வழி தொடர்ச்சியாக வேற்றுக் கிரகவாசிகள் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

பூமி மட்டும் தான் உயிரினங்கள் வாழக்கூடிய கிரகமாக இருக்கமுடியாது என்று நம்பும் நாசா விஞ்ஞானிகள், இந்தப் பிரபஞ்சத்தில் மனிதர்கள் தனித்து வாழவில்லை என்பதில் திட்டவட்டமாக இருக்கின்றனர்.

இதுவரையில் 4,034 கிரகங்கள் பற்றிய தகவல்களை கெப்ளர் தொலைநோக்காடி மூலம் விஞ்ஞானிகள் திரட்டியுள்ளனர். இவற்றில் 50 கிரகங்கள் பூமியின் தனமையைக் கொண்டிருந்தாலும், அதில் 10 கிரகங்கள் மட்டுமே உண்மையில் பல்வேறு கூறுகளில் பூமியை ஒத்ததாக உள்ளன. இந்தக் கிரகங்களில் தண்ணீர் இருப்பதற்கான சாத்தியம் இருப்பதாக கருதப்படுகிறது.

அதன் அடிப்படையில் இதுவரையிலும் 4,034 கிரகங்களை நாசா கண்டுபிடித்துள்ளது. அவற்றினில் 10 கிரகங்கள் பூமிக்கு ஒத்தனவாகவும் பூமியைப் போன்று சூரியனை சுற்றி வருபவையாகவும் இருக்கின்றன. 

இந்தக் கிரகங்களில் வேற்று உயிரினங்கள் தோன்றி இருக்கக்கூடிய சாத்தியங்கள் அல்லது இனிமேல் தோன்றக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாகவும் நாசா குறிப்பிட்டு இருக்கும் அதேவேளையில், வேற்றுக் கிரகவாசிகள் இருக்கக்கூடிய சாத்தியங்களை நாசா மறுஉறுதிப்படுத்தி இருப்பதாகவே கருதப்படுக்கிறது.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS