Home | மலேசியா | இந்தோனேசியப் பணிப்பெண் வெட்டிக்கொலை

இந்தோனேசியப் பணிப்பெண் வெட்டிக்கொலை

By
Font size: Decrease font Enlarge font

கோலாலம்பூர், 27 ஜனவரி- உணவகத்தில் பணிப்புரிந்து வந்த இந்தோனேசியப் பணிப்பெண் ஒருவர், தனது வாடகை வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் இன்று ஜாலான் ராடின் ஆனும் 1, ஜாலான் ஸ்ரீ பெட்டாலிங்கில் அமைந்துள்ள ஒரு இரட்டை மாடி கடை வீட்டில் நிகழ்ந்தது.

குரானி (வயது 46) என அடையாளம் காணப்பட்ட அந்த இந்தோனேசியப் பணிப்பெண் இன்று மாலை 4 மணியளவில் இறந்து கிடக்கக் காணப்பட்டதாக அவரது சகோதரி தெரிவித்தார்.

19 வாடகை அறைகள் கொண்ட அந்த கடை வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று தனது சகோதரி தங்கியுள்ள அறை கதவை பலமுறை தட்டியும் பதில் வரவில்லை” என அப்பெண் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொடக்கக் கட்ட விசாரணையில் அப்பெண்ணின் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த அப்பெண்ணின் சடலம் சவப்பரிசோதனைக்காக மலாயாப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

Subscribe to comments feed Comments (0 posted)

total: | displaying:

Post your comment

  • Bold
  • Italic
  • Underline
  • Quote

Please enter the code you see in the image:

Captcha
  • Email to a friend Email to a friend
  • Print version Print version
  • Plain text Plain text

Tagged as:

No tags for this article

Rate this article

0
Powered by Vivvo CMS v4.6