Home | மலேசியா | அரசாங்கம் சீனி விலையை RM 2.30-ஆக நிலைநிறுத்துகிறது

அரசாங்கம் சீனி விலையை RM 2.30-ஆக நிலைநிறுத்துகிறது

By
Font size: Decrease font Enlarge font
அரசாங்கம் சீனி விலையை RM 2.30-ஆக நிலைநிறுத்துகிறது

 

கோலாலம்பூர், 27 ஜனவரி- உலகச் சந்தையில் சீனியின் விலை அதிகரித்தாலும், மலேசியாவில் ஒரு கிலோ சீனியின் விலையை RM 2.30 காசாகவே நிலைநிறுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டு வாணிப, கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

அவ்வகையில், இதுவரை 20 காசாக மட்டுமே இருந்த சீனிக்கான உதவித்தொகை 54 காசாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், சீனிக்கான அரசாங்கத்தின் உதவித்தொகை கடந்த 2011-ஆம் ஆண்டு RM 262.41 லட்சத்திலிருந்து இவ்வாண்டு RM 567 லட்சமாக அரசாங்கம் அதிகரித்துள்ளது.

“சீனியின் விலை அதிகரித்தால் மற்ற பொருட்களின் விலையும் அதிகரிக்கும்”.

எனவே, Kedai Rakyat 1 Malaysia மற்றும் ஒரே மலேசியா உணவுத் திட்டம் மூலம் மக்களின் சுமையைக் குறைக்கும் முயற்சியில் அரசாங்கம் இறங்கியுள்ளது.

எனவே, மக்களுக்கு எந்த வகையான நிதிச் சுமையையும் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காகவே, அரசாங்கம் சீனியின் விலையை நிலைநிறுத்தியுள்ளது” என்றார் அவர்.

 

Subscribe to comments feed Comments (0 posted)

total: | displaying:

Post your comment

  • Bold
  • Italic
  • Underline
  • Quote

Please enter the code you see in the image:

Captcha
  • Email to a friend Email to a friend
  • Print version Print version
  • Plain text Plain text

Tagged as:

No tags for this article

Rate this article

0
Powered by Vivvo CMS v4.6