பகவத் கீதையைத் தடை செய்தே தீருவோம்-ரஷ்ய போராட்டக்காரர்கள் அறிவிப்பு
மாஸ்கோ, ஜனவரி 27- சமூக அமைப்பில் பிரிவினையைத் தூண்டும் எண்ணத்தோடு இஸ்கான் அமைப்பு வெளியிட்டுள்ள பகவத் கீதையை ரஷ்யாவில் தடை செய்யாமல் ஓயமாட்டோம் என கிறிஸ்டியன் ஆர்தோடக்ஸ் சர்ச் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். ரஷியாவின் டோம்ஸ் நகரில் பகவத் கீதைக்குத் தடைகோரி தொடரப்பட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அதே நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கடந்த புதன்கிழமை வரையிலும் அவகாசம் வழங்கியிருந்தது.
இதனிடையே டோம்ஸ்க் நீதிமன்றத்தில் நேற்று வரை மேல்முறையீடு செய்யப்படவில்லை. டோம்ஸ் நீதிமன்றத்தை விட மேல் நீதிமன்றத்தில் முறையீடு செய்து பகவத் கீதைக்குத் தடை வாங்கியே தீருவோம் என கிறிஸ்டியன் சர்ச் நிர்வாகத்தினர் கூறியுள்ளனர். பகவத் கீதைக்குத் தடையா? என பொங்கியெழுந்த இந்த அமைப்பினரின் வேண்டுகோளை ஏற்று வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம் கிருஷ்ணா, ரஷியாவுக்கு கடும் நெருக்கடி கொடுத்து சாதகமான தீர்ப்பை பெற்று தந்தார். எனினும், இவ்விவகாரத்திற்கு இன்னமும் தீர்வு பிறக்கவில்லை.



Post your comment