பினாங்கு செண்ட்ரலில் 25 கடைகள் தீக்கிரை
By
27/01/2012 11:07:00
பட்டர்வர்த், 27 ஜனவரி- பினாங்கு பேருந்து நிலையத்திற்கு அருகே 25 கடைக் வீடுகள் தீக்கிரையானது. முன்னதாக, நேற்றிரவு 11.39 மணியளவில் பொதுமக்களிடமிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து , தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தை நோக்கி விரைந்ததாக பினாங்கு மாநில தீயணைப்பு மற்றும் மீட்பு படை இயக்குனர் அஸ்மி தமாட் தெரிவித்தார்.
நாங்கள் சம்பவ இடத்தை அடைந்த போது, தீ வேகமாக பரவிக்கொண்டிருந்தது” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மொத்தம் 75 தீயணைப்பு வீரர்கள் 5 தீயணைப்பு வாகனங்களில் வந்திறங்கி சுமார் 25 நிமிடங்களில் தீயை அணைக்க போராடினர்.
எனினும், இச்சம்பவத்தில் உயிருடற்சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



Post your comment