இருமொழி பாட திட்டத்தை எதிர்த்து புத்ராஜெயாவில் மக்கள் பேரணி! (VIDEO)

சமூகம்
Typography

புத்ராஜெயா, மே.19- இருமொழி பாடத் திட்டத்தை எதிர்த்து இன்று புத்ராஜெயாவில் கல்வி அமைச்சின் வளாகத்தில் தமிழ் இஅயக்கங்கள் அமைதி பேரணி ஒன்றை நடைத்தினர். இந்த திட்டத்தைத் தமிழ்ப் பள்ளிகளிலிருந்து முழுவதுமாக அகற்ற வேண்டும் என்று கோரி கல்வி அமைச்சருக்கு மகஜர் ஒன்றையும் இவர்கள் வழங்கினர்.

நாடு முழுவதிலிருந்தும் சுமார் 800க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரணியில் கலந்து கொண்டனர். மலேசிய நாம் தமிழர் இயக்கம், தெற்கு சகோதரர்கள் இயக்கம், மலேசிய மனிதநேய திராவிட இயக்கம், அறம் இயக்கம் போன்ற பல அரசு சாரா இயக்கங்கள் ஒன்றிணைந்து இந்த ‘மே 19’ பேரணியை நடத்தின. பேரணியில் கலந்து கொண்டவர்கள் இருமொழி பாட திட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்த வண்ணம் அமைச்சு வளாகத்தை நோக்கி சென்றனர்.

மகஜர் வழங்குவதற்காக அமைச்சர் அலுவலகத்திற்கு செல்ல நால்வர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து கல்வி அமைச்சின் அதிகாரி ஹபிபுல்லாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பேரணியினர் சார்பில் 4 பிரதிநிதிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டனர்

கல்வி அமைச்சு அதிகாரியின் கோரிக்கைக்கு இணங்க ‘மே 19’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் அலுவலகத்திற்குள் சென்று மகஜரை ஒப்படைத்தனர். 

ஆனால், கல்வி அமைச்சரும், துணை அமைச்சரும் அலுவலகத்தில் இல்லாத காரணத்தால், துணை அமைச்சர் கமலநாதனின் சிறப்பு அதிகாரியிடம் இந்த மகஜரை ஒப்படைத்தனர். 

இந்த இருமொழி பாட திட்டத்தை முற்றிலுமாக தமிழ்ப் பள்ளிகளிலிருந்து அகற்றும் வரை இந்த இயக்கம் ஓயாமல் செயல்படும் என்று ‘மே 19’ இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS