நெடுஞ்சாலை நிலச்சரிவு; தண்ணீர் தடையினால் 30,000 பேர் பாதிப்பு!

சமூகம்
Typography

 மிரி, மே.19- வட சரவாவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த நிலச் சரிவைத் தொடர்ந்து பெக்கெனு மற்றும் சுபிஸ் ஆகிய துணை மாவட்டங்களில் உள்ள 30,000க்கும் அதிகமான மக்களுக்கு நீர் விநியோகத் தடை ஏற்பட்டுள்ளது. 

பான் போர்னியோ நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் ஏற்பட்டுள்ள நீர் விநியோகத் தடையில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மிரி தீயணைப்பு மீட்பு குழு, பொதுப்பணித் துறை மற்றும் வட சரவா தண்ணீர் வாரியம் ஆகியவை உடனடியாக நீர் விநியோகம் செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு மிரியில் இருக்கும் முக்கிய தண்ணீர் குழாய்களைச் சேதப்படுத்தின என்று மிரி தீயணைப்பு மீட்பு குழு தலைவர் லோ போ கியொங் கூறினார்.

அந்த நெடுஞ்சாலை விரைவில் சரி செய்யப்பட்டு நீர் விநியோகமும் வழங்கப்படுவதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக லோ போ கியோங் அறிவித்தார். எந்தவொரு உயிருடற்சேதமும் இந்த நிலச்சரிவில் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.L

BLOG COMMENTS POWERED BY DISQUS