ஜொகூர் சுல்தானின் நெருங்கிய உறவினர் சாலை விபத்தில் மரணம்

சமூகம்
Typography

ஜொகூர்பாரு, மே 19- இன்று காலையில் நடந்த சாலை விபத்தில் ஜொகூர் சுல்தானின் நெருங்கிய உறவினர் மரணமடைந்தார். டங்கா சிட்டி பேரங்காடி அமைந்திருக்கும் ஜாலான் லிங்கரான் டாலாம் எனுமிடத்தில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

இன்று காலை 9.45 மணிக்கு சம்பவத்தில் பலியான துங்கு அமால் ஜாகியா துங்கு முகமட் ஆர்சிபால்ட் (வயது 58) என்பவர் தனது 22 வயது மகள் ஓட்டி சென்ற காரில் பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, மற்றொரு காரை மோதுவதிலிருந்து தடுப்பதற்காக வாகனத்தைத் திருப்பியபோது அக்கார் சாலை தடுப்பு சிமெண்டை பலமாக மோதியது என ஜொகூர் போலீஸ் தலைவர் டத்தோ ஶ்ரீ வான் அமாட் நஜ்முடின் முகமட் கூறினார். 

சம்பந்தப்பட்ட கார் தாமான் நோங் சிக்கிலிருந்து வந்து கொண்டிருந்ததாகவும் விபத்தினால் துங்கு அமாலின் நெஞ்சுப் பகுதியில் பலமான காயம் ஏற்பட்டதாகவும் அதனால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாகவும் போலீஸ் தலைவர் கூறினார். காரை ஓட்டிய பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டதால் அவர் சுல்தானா அமீனா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டார்.  

BLOG COMMENTS POWERED BY DISQUS